| கேமசரியார் இலம்பகம் |
804 |
|
|
|
யான மானம், பிரத்தியாக்கியான மாயை, பிரத்தியாக்கியான லோபம் என்னுமிவ் வெட்டுமாம். இவற்றின் விளக்கம் முத்தியிலம்பகத்தில் (3076) கூறப்படும், ஆண்டுக் காண்க. இச் செய்யுள்,
|
|
| ”பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் |
|
|
| பற்றுக பற்று விடற்கு” (குறள். 350) |
|
|
|
என்றும்,
|
|
| ”பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் |
|
|
| பற்றி விடாஅ தவர்க்கு” (குறள். 347) |
|
|
|
என்றும் வரும் இரண்டு திருக்குறட் கருத்தினையுந் தன்பாற் கொண்டுளது.
|
|
|
கழிப : பலவறிசொல்.
|
|
|
இவை இருபுறவாழ்த்து; தேவபாணித் தாழிசைக்கொச்சக ஒருபோகு. இவற்றின் இடையிடையே நாலசைச்சீர்களும் வந்துள்ளன.
|
( 9 ) |
வேறு
|
|
| 1421 |
இனிதி னிங்ஙன மேத்தி வலங்கொண்டு | |
| |
முனிவர் சித்திர கூடமு னாதெனத் | |
| |
தனிதி னேகுபு தாபதர் வாழ்வதோர் | |
| |
பனிகொள் பூம்பொழிற் பள்ளிகண் டானரோ. | |
|
|
(இ - ள்.) இங்ஙனம் இனிதின் ஏத்தி வலம்கொண்டு - இவ்வாறு குரலின் இனிமையோடு வாழ்த்தி வலம்புரிந்துவிட்டு; முனிவர் சித்திரகூடம் முனாது என - முனிவருடைய சித்திரகூடம் முன்னுள்ளதென்று சுதஞ்சணன் கூறியதால்; தனிதின் ஏகுபு - (அதனைக் காண எண்ணித்) தனியே சென்று; தாபதர் வாழ்வது ஓர் பனிகொள் பூம்பொழில் பள்ளிகண்டான் - தாபதர்கள் வாழ்வதாகிய ஒரு குளிர்ச்சி தங்கிய மலர்ப்பொழிலில் உள்ள பள்ளியைக் கண்டான்.
|
|
|
(வி - ம்.) சித்திரகூடம், பள்ளியின் பெயர். 'தனித்து' என்பது 'தனிது' என விகாரப்பட்டது. தனிதின் : இன் : அசை. அரோ : அசை. இனிதின் என்புழி இன் அசைச்சொல். என - என்று சுதஞ்சணன் முற்கூறியிருந்தமையால் (1190).
|
( 10 ) |
| 1422 |
புல்லு மல்லியும் போகுயர் நீள்கழை | |
| |
நெல்லு நீர்விளை கேழலுந் தோரையு | |
| |
மல்ல தீம்பழங் காய்கிழங் காதியா | |
| |
நல்ல வேநுகர் வார்பள்ளி நண்ணினான். | |
|
|
(இ - ள்.) புல்லும் அல்லியும் போகுஉயர் நீள்கழை நெல்லும் நீர்விளை கேழலும் தோரையும் - (ஊனை நுகராமல்) புல்லும்
|
|