| கேமசரியார் இலம்பகம் | 
805  | 
 | 
  | 
| 
 அல்லியும் மிக உயர்ந்த மூங்கிலரிசியும் நீரில்விளை குளநெல்லும் தோரை என்னும் நெல்லும்; அல்ல தீம் பழம் காய்கிழங்கு ஆதி ஆ - ஆகிய இவையல்லாமலும் இனிய பழமும் காயும் கிழங்கும் முதலாக; நல்லவே நுகர்வார் பள்ளி நண்ணினான் - நல்லவற்றையே நுகர்வாராகிய தாபதர் வாழும் பள்ளியைச் சேர்ந்தான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) புல், அல்லி, நெல், கேழல், தோரை என்பன இவற்றின் அரிசிகட்கு ஆகுபெயர். போகுயர் : ஒரு பொருட் பன்மொழி; மிக வளர்ந்த என்க. கேழல் - குளநெல். தோரை - மூங்கிலரிசி. அல்ல என்றது இவையல்லாதவிடத்து என்றவாறு. 
 | 
  | 
| 
    நல்லவே என்புழி ஏகாரம் - பிரிநிலை; என்னை? தீயவாகிய ஊன் உணவைப் பிரித்து நிற்றலின் என்க. 
 | 
( 11 ) | 
|  1423 | 
அரிய கொள்கைய ராரழ லைந்தினுண் |   |  
|   | 
மருவி வீடு வளைக்குறு மாட்சியர் |   |  
|   | 
விரிய வேதம் விளம்பிய நாவினர் |   |  
|   | 
தெரிவி றீத்தொழிற் சிந்தையின் மேயினார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அரிய கொள்கையர் - அரியவான கோட்பாடுகளையுடையவர்; ஆர் அழல் ஐந்தினுள் மருவி வீடு வளைக்குறும் மாட்சியர் - நிறைந்த ஐந்தழலின் நடுவே பொருந்தி வீட்டுலகை வளைத்திடும் பெருமையினர்; விரிய வேதம் விளம்பிய நாவினர் - விளக்கமாக நான்மறை பயின்ற நாவினர்; தெரிவு இல் தீத்தொழில் சிந்தையின் மேயினார் - விளக்கமற்ற தீய தொழிலான காமத்தொழிலைச் சிந்தையிற் கொண்டவர். 
 | 
  | 
| 
    (வி - ம்.) ஆர் அழல் ஐந்திடை மருவி என்றது, நான்கு திசைகளினும் வளர்க்கப்பட்ட ஓமகுண்டத் தீயும் உச்சியிற் கதிரவனுமாகிய ஐந்து தீயின் நடுவண் நின்று என்றவாறு. 
 | 
  | 
| 
    தெரிவுஇல் தீத்தொழில் என்றது, காம வேட்கையாலியற்றும் தீவினைகளை. 
 | 
  | 
| 
    அரிய கொள்கையாவன : நாலிரு வழக்கில் தாபதப் பக்கம்; 'நீர்பில கால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் - சோர்நடை தாழச் சுடரோம்பி - ஊரடையார் - கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் - வானகத் துய்க்கும் வழி.' (பு. வெ. 168) என்பனவும் பிறவுமாம். 
 | 
( 12 ) | 
|  1424 | 
வள்ளி யின்னமு தும்வரை வாழையின் |   |  
|   | 
றெள்ளு தீங்கனி யுஞ்சில தந்தபின் |   |  
|   | 
வெள்ள மாரிய னாய்விருந் தார்கென |   |  
|   | 
வுள்ள மாட்சியி னாருவந் தோம்பினார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வள்ளி இன் அமுதும் - வள்ளிக்கிழங்காகிய சுவையுடைய உணவும், வரை வாழையின் - மலையிலுண்டாம் வாழையி 
 | 
  |