| கேமசரியார் இலம்பகம் |
807 |
|
|
|
நுகர்ச்சியோடே விரதங்களைக் கொண்டவர்களும்; உய்ப என்று ஓதினான் - பிழைப்பரென்று நூல்களை எடுத்துக் காட்டி விளக்கினான்.
|
|
|
(வி - ம்.) ஐயர் - தலைவர்; என்றது அம் முனிவரை. சையம் - கல். இச் செய்யுளோடு,
|
|
| ”இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை |
|
|
| மயலாகும் மற்றும் பெயர்த்து” (குறள். 344) |
|
|
|
என்னுந் திருக்குறளை நினைக. ”எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாத வழியும், அது சார்பாக விட்டனவெல்லாம் மீண்டு வந்து தவத்திற்கு இடையூறாய் வந்து மனக்கலக்கம் செய்யும் என்பான், தொடர்ப்பாட்டின் இங்கு யாவையும் உய்ப என்றோதினான் என்க. இச் செய்யுள் மனைவிமக்களோடிருந்தும் வீடெய்துதல் கூடும் என்னும் ஏனைச் சமயிகளைப் பழித்தபடியாம்.
|
|
|
அவர்கள் மனைவியருடன் இருத்தலின் தொடர்ப்பாடு என்றான்.
|
( 15 ) |
| 1427 |
வீடு வேண்டி விழுச்சடை நீட்டன்மெய்ம் | |
| |
மூடு கூறையின் மூடுதல் வெண்டலை | |
| |
யோடுகோட லுடுத்தலென் றின்னவை | |
| |
பீடி லாப்பிற விக்குவித் தென்பவே. | |
|
|
(இ - ள்.) வீடு வேண்டி விழுச்சடை நீட்டல் - வீடு பெற விரும்பிச் சிறப்புறச் சடையை நீட்டுதல்; மெய்ம் மூடு கூறையின் மூடுதல் - உடம்பை மறைக்கும் துவர் ஊட்டின ஆடையினாலே போர்த்துக் கொள்ளுதல்; வெண்டலை ஓடு கோடல் - மண்டையோடு கைக்கொள்ளுதல்; உடுத்தல் - தனியே இருத்தல்; என்று இன்னவை - என்று கூறப்படும் இத்தன்மையவை; பீடு இலாப் பிறவிக்கு வித்து என்ப - சிறப்பிலாத பிறப்புக்கு வித்து என்று உண்மையுணர்ந்தோர் கூறுவர்.
|
|
|
(வி - ம்.) இச் செய்யுள்,
|
|
| ”மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் |
|
|
| பழித்த தொழித்து விடின்” |
|
|
|
என்னுந் திருக்குறளின் விளக்கமாக அமைந்துள்ளமை உணர்க. துன்பமல்லது தொழுதகவு இல்லாப் பிறப்பென்பான், பீடிலாப் பிறவி என்றான்.
|
( 16 ) |
| 1428 |
ஏம நன்னெறி யெந்நெறி யன்னெறி | |
| |
தூய்மை யின்னெறி யாமுந்து ணிகுவங் | |
| |
காமன் றாதை நெறியின்கட் காளைநீ | |
| |
தீமை யுண்டெனிற் செப்பெனச் செப்பினான். | |
|