| கேமசரியார் இலம்பகம் | 
809  | 
 | 
  | 
|  1430 | 
அல்லியும் புல்லு முண்டாங் |   |  
|   | 
  காரழ லைந்து ணின்று |   |  
|   | 
சொல்லிய வகையி னோற்பத் |   |  
|   | 
  துணியும்வெவ் வினைக ளென்னிற் |   |  
|   | 
கல்லுண்டு கடிய வெம்புங் |   |  
|   | 
  கானுறை புறவ மெல்லாம் |   |  
|   | 
புல்லிய வினையை வென்று |   |  
|   | 
  புறக்கொடை காணு மன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அல்லியும் புல்லும் உண்டு - அல்லிக் காயில் உள்ள அரிசியையும் புல்லரிசியையும் சாப்பிட்டு; ஆங்கு ஆர் அழல் ஐந்துள் நின்று - அங்கே நிறைந்த ஐந்தழலின் நடுவே நின்று; சொல்லிய வகையின் நோற்ப - பகவனார் கூறிய நெறியிலே நோற்பதனால்; வெவ்வினைகள் துணியும் என்னின் - தீவினைகள் அறும் என்றால்; கடிய வெம்பும் கான் கல் உண்டு உறையும் புறவம் எல்லாம் - கொடிய வெப்பமுடைய கானிலே கற்களை உண்டு வாழும் புறாக்கள் யாவும; புல்லிய வினையை வென்று புறக்கொடை காணும் அன்றே - தம்மைத் தொடர்ந்த இருவினையையும் வென்று புறங்காணும் அல்லவா? 
 | 
  | 
| 
    (வி - ம்.) வெப்பமிக்க பாலையின்கண் கல் முதலியவற்றை உண்டு வாழும் புறாவின் பிறப்பறாமைபோல நல்லனவே உண்டு அழல் நடுவில் நின்று தவமியற்றன் மாத்திரையானே பிறப்பொழியா தென்பது கருத்து. 
 | 
  | 
| 
    இதுவும் மாறுபடவந்த உவமத் தோற்றமே. 
 | 
( 19 ) | 
|  1431 | 
நீட்டிய சடைய மாகி |   |  
|   | 
  நீர்மூழ்கி நிலத்திற் சோ்ந்து |   |  
|   | 
வாட்டிய வுடம்பின் யாங்கள் |   |  
|   | 
  வரகதி விளைத்து மென்னிற் |   |  
|   | 
காட்டிடைக் கரடி போகிக் |   |  
|   | 
  கயமூழ்கிக் காட்டி னின்று |   |  
|   | 
வீட்டினை விளைக்க வேண்டும் |   |  
|   | 
  வெளிற்றுரை விடுமி னென்றான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நீட்டிய சடையம் ஆகி - நீண்ட சடையினேம் ஆகி; நீர் மூழ்கி - நீரிலே குளித்து; நிலத்திற் சேர்ந்து - தரையிலே தங்கி; வாட்டிய உடம்பின் யாங்கள் வரகதி வளைத்தும் என்னின் - வாட்டிய உடம்பினாலே நாங்கள் மேலோன வீட்டை அடைவோம் என்றால்; காட்டிடைக் கரடி போகிக் கயம் மூழ்கி - 
 | 
  |