| கேமசரியார் இலம்பகம் |
812 |
|
|
| 1435 |
நோய்முதிர் குரங்கு போல | |
| |
நுகர்ச்சிநீர் நோக்கல் வேண்டா | |
| |
காய்முதிர் கனியி னூழ்த்து | |
| |
வீழுமிவ் வியாக்கை யின்னே | |
| |
வேய்முதிர் வனத்தின் வென்றா | |
| |
னுருவொடு விளங்க நோற்றுப் | |
| |
போய்முதிர் துறக்கத் தின்பம் | |
| |
பருகுவ புரிமி னென்றான். | |
|
|
(இ - ள்.) நோய்முதிர் குரங்குபோல நுகர்ச்சி நீர் நோக்கல் வேண்டா - காமநோயினால் முதிர்ந்த குரங்கைப்போல நீவிர் காம நுகர்ச்சியை நோக்குதல் வேண்டா; காய் முதிர் கனியின் ஊழ்த்து இவ் யாக்கை வீழும் - காய் முற்றிப் பழமாகி விழுவதைப் போல, முதிர்ச்சி அடைந்து இவ்வுடம்பு விழுந்து விடும்; வேய் முதிர் வனத்தின் - மூங்கில் முற்றிய காட்டிலே; வென்றான் உருவொடு விளங்க இன்னே நோற்றுப்போய் - காமனை வென்ற அருகப்பெருமான் உருவத்துடன் நின்று விளக்கமுற இப்பொழுதே நோற்றுச் சென்று; முதிர் துறக்கத்து இன்பம் பருகுதலைப் புரிமின் என்றான் - முற்றிய துறக்க வின்பத்தை நுகர்தலை விரும்புமின் என்று சீவகன் செப்பினான்.
|
|
|
(வி - ம்.) கொண்டது விடாமையானும் குரங்கு உவமையாயிற்று. 'வேண்டின் உண்டாகத் துறக்க' என்பான் இன்னே என்றான். இன்னே என்பதனை நோற்றுப்போய் என்பதனோடு கூட்டுக. வென்றான் : பெயர்.
|
( 24 ) |
| 1436 |
மெய்வகை தெரிதன் ஞானம் | |
| |
விளங்கிய பொருள்க டம்மைப் | |
| |
பொய்வகை யின்றித் தேறல் | |
| |
காட்சியைம் பொறியும் வாட்டி | |
| |
யுய்வகை யுயிரைத் தேயா | |
| |
தொழுகுத லொழுக்க மூன்று | |
| |
மிவ்வகை நிறைந்த போழ்தே | |
| |
யிருவினை கழியு மென்றான். | |
|
|
(இ - ள்.) ஞானம் மெய்வகை தெரிதல் - ஞானமாவது உண்மை அறிதல்; காட்சி விளங்கிய பொருள்கள் தம்மைப் பொய்வகை இன்றித் தேறல் - காட்சியாவது அவ்வாறு அறிந்த பொருள்களைப் பொய்யின்றாகத் தெளிதல்; ஒழுக்கம் ஐம்பொறியும் வாட்டி உய்வகை உயிரைத் தேயாது ஒழுகுதல் - ஒழுக்கமாவது ஐம்பொறிகளையும் ஐம்புலன்களிற் செல்லாமற் கெடுத்து
|
|