| கேமசரியார் இலம்பகம் |
814 |
|
|
|
எழுந்து போய் என்றது, அப்பொழுதே எழுந்துபோய் என்பதுபட நின்றது.
|
|
|
'வட்டம் என்றது, ஞாயிறு நாடோறும் வட்டமாய் மாமேரு வருதலை' என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 26 ) |
வேறு
|
|
| 1438 |
அசைவு தீர்ந்திரு ளஃகிய காலையே | |
| |
வசையி னீங்கியி னார்வழி காட்டலிற் | |
| |
றிசையும் யாறுந் தெரிந்துகொண் டேகினான் | |
| |
மிசையு மில்லதோர் மெய்ப்பொறி யாக்கையான். | |
|
|
(இ - ள்.) அசைவு தீர்ந்து இருள் அஃகிய காலையே - அங்ஙனம் இளைப்பாறி இருள்புலர்ந்த வைகறையிலே; வசையின் நீங்கினார் வழி காட்டலின் - குற்றத்திலிருந்து நீங்கினவர்கள் வழிகாட்டியதால்; மிசையும் இல்லது ஓர் மெய்ப்பொறி யாக்கையான் - மேலுலகினும் இல்லாததாகிய ஒப்பற்ற உண்மை இலக்கணம் அமைந்த உடம்பினான்; திசையும் யாறும் தெரிந்து கொண்டு ஏகினான் - திக்கும் யாறும் விளங்கிக்கொண்டு சென்றான்.
|
|
|
(வி - ம்.) வசை - காமவெகுளி மயக்கமென்னும் குற்றம். இனி 9 - ஆம் செய்யுளிற் கூறப்பட்ட அப்பிரத்தியாக்கியான, பிரத்தியாக்கியான குரோதம் மானம் மாயை லோபம் என்பனவுமாம்.
|
|
|
மிசை : தேவருலகிற்கு ஆகுபெயர். மெய்ப்பொறி - உடலுக்குக் கூறும் நல்லிலக்கணம். நீங்கியினார் : இன் : அசை.
|
( 27 ) |
வேறு
|
|
| 1439 |
படம்புனைந் தெழுதிய வடிவிற் பங்கயத் | |
| |
தடம்பல தழீ இயது தக்க நாடது | |
| |
வடங்கெழு வருமுலை மகளிர் மாமைபோன் | |
| |
றிடம்பெரி தினிதத னெல்லை யெய்தினான். | |
|
|
(இ - ள்.) புனைந்து எழுதிய படம் வடிவில் - ஒப்பனை செய்து வரைந்த படத்தின் வடிவுபோல; பங்கயத் தடம் பல தழீ இயது - தாமரைக்குளம் பல சூழ்ந்தது; வடம்கெழு வருமுலை மகளிர் மாமைபோன்று இடம் பெரிது இனிது - முத்து வடம் முதலிய பொருந்திய வளரும் முலையுடைய மங்கையரின் அழகு போல நுகர்வார்க்குப் பெரிதும் இனியது; அது தக்க நாடு - அது தக்க நாடென்னும் பெயருடையது; அதன் எல்லை எய்தினான் - அதன் எல்லையைச் சீவகன் அடைந்தான்.
|
|
|
(வி - ம்.) ஓவியப்புலவன் கிழியின்கண் தன் கலையுணர்ச்சியினாற்புனைந்து வரையப்பட்ட ஓவியம் போலத்தோன்றும் தாமரைத் தடம்பல
|
|