கேமசரியார் இலம்பகம் |
817 |
|
|
1444 |
அகழ்கிடங் கந்துகி லார்ந்த பாம்புரி | |
|
புகழ்தகு மேகலை நாயில் பூண்முலை | |
|
திகழ்மணிக் கோபுரந் திங்கள் வாண்முகஞ் | |
|
சிகழிகை நெடுங்கொடி செல்விக் கென்பவே. | |
|
(இ - ள்.) செல்விக்கு - மதிலாகிய செல்விக்கு; அகழ்கிடங்கு அம்துகில் - அகழ்ந்த கிடங்கு அழகிய துகில்; ஆர்ந்த பாம்புரி புகழ்தகு மேகலை - பொருந்திய பாம்புரி புகழத்தக்க மேகலை; நாயில் பூண்முலை - ஞாயில் பூணணிந்த முலை; திகழ் மணிக்கோபுரம் திங்கள் வாண்முகம் - விளங்கும் மணிக்கோபுரம் திங்களனைய ஒளிரும் முகம்; நெடுங்கொடி சிகழிகை - நீண்ட கோடி மயிர்முடி; என்ப - என்று சொல்வார்.
|
|
(வி - ம்.) ”பத்திரப் பாம்புரி அத்தகக் கலாஅய்” என்றார் கதையினும் (3 - 3 : 17)
|
|
பாம்புரி : மதிலின் அடியே உள்ள ஆளோடிகள் (சீவக. 1250; அடிக்குறிப்பு) நாயில் : ஞாயில்: போலி. ஞாயில் - மதிலின் ஓர் உறுப்பு; மதிலில் இருப்போர் வெளியார்மேல் அம்பெய்து மறையும் சூட்டு.
|
( 33 ) |
1445 |
நாட்டிய மணிவரை கடைந்து நல்லமிர் | |
|
தூட்டினு மதனைவிட் டுறைந ரின்மையா> | |
|
லீட்டிய வளநிதி யிறைகொண் மாநகர்ச்/span> |
|
சூட்டுவைத் தனையதச் சுடர்ப்பொ னிஞ்சியே. | |
|
(இ - ள்.) அச் சுடர்ப்பொன் இஞ்சி - அந்த ஒளியுறும் பொன்மதில்; நாட்டிய மணிவரை கடைந்து நல் அமிர்து ஊட்டினும் - மந்தரம் என்று பெயர் நாட்டிய மலையாலே கடலைக் கடைந்து அமிர்தத்தை ஊட்டினும்; அதனை விட்டு உறைநர் இன்மையால் - அந் நகரை விட்டுப் போய்த் தங்கவாரில்லாமையால்; ஈட்டிய வளநிதி இறைகொள் மாநகர் - ஈட்டப்பட்ட வளமுறு செல்வம் தங்கிய அப் பெருநகரம்; சூட்டு வைத்தனையது - நகரங்கட்கெல்லாம் தலையென்று சூட்டு வைத்தால் ஒத்தது என்க.
|
|
(வி - ம்.) இனி, அ மணிவரை நாட்டி - எனப் பிரித்துக் கூட்டுக் கண்ணழித்து அம்மணி மலையாகிய மந்தரத்தை நட்டு எனினுமாம். இதற்கு அகரச்சுட்டுப் பண்டறி சுட்டு ஆகும்.
|
|
இதற்கு நிதி, ஆகுபெயர். 'சூட்டு' என்றது சிறப்புப் பட்டத்திற்கு அடையாளமாகிய ஓரணிகலனை.
|
( 34 ) |
1446 |
எறிசுற விளையவ ரேந்து பூங்கொடி | |
|
மறிதிரை வரைபுரை மாட மாக்கலம் | |
|
பெறலருந் திருவனா ரமுதம் பேரொலி | |
|
யறைகடல் வளநக ராய தென்பவே. | |
|