| கேமசரியார் இலம்பகம் |
828 |
|
|
| 1465 |
வார்ந்திலங் கெயிறணி பவழ மாண்டவா | |
| |
யார்ந்தபூ வங்கையு மடியுந் தாமரை | |
| |
தோ்ந்தனன் றிருமகள் கணவ னாமெனத் | |
| |
தீர்ந்தனன் சொல்லளைஇத் தோ்க்கொண் டேறினான். | |
|
|
(இ - ள்.) வார்ந்து இலங்கு எயிறு அணிவாய் பவழம் - நீண்டு விளங்குகின்ற, பற்களையுடைய வாய் பவழத்தை ஒக்கும்; அங்கையும் அடியும் ஆர்ந்த தாமரைப்பூ - அகங்கையும் உள்ளடியும் பொருந்திய தாமரைப் பூவை ஒக்கும்; (ஆதலால்) திருமகள் கணவன் ஆம் எனத் தேர்ந்தனன் - இவன் திருமாலாவான் என்று தன்னிலே ஆராய்ந்தான்; சொல் அளை இத் தீர்ந்தனன் - சீவகனோடு கலந்து உரையாடித் திருமால் அல்லன் என்ற தெளிந்தான்; தேர் கொண்டு ஏளினான் - பின்னர்த் தேரிலே அவனை அமர்த்திக் கொண்டு தானும் ஏறினான்.
|
|
|
(வி - ம்.) மாண்ட வாய் - மாட்சிமையுடைய வாய். பற்களால் அணியப்பட்ட வாய் என்க. அளைஇ - கலந்து அளைஇ என்பது தீர்ந்தனன் என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. இவனே என் திருமகள் கணவனாம் என்றும் ஒரு பொருள் தோற்றி நின்றது.
|
|
|
சீவகனுடைய தோற்றம் இந்த ஆறு செய்யுட்களிலும் தலைதடுமாறக் கூறிற்றாயினும் தலைமுதல் அடிவரை முறையே கொள்க.
|
( 54 ) |
| 1466 |
தேரிவ ரூர்ந்தனர் செல்ல விற்றலைக் | |
| |
கூருகிர் விடுத்ததோர் கோல மாலையைப் | |
| |
பேரிசை வீணையிற் சூட்டிப் பெண்கொடிக் | |
| |
காரிகை யுலகுணர் கடவுட் பாடுமே. | |
|
|
(இ - ள்.) இவர் தேர் ஊர்ந்தனர் செல்ல - இவர்கள் தேரூர்ந்து சென்று கொண்டிருக்கும்போது; இல்தலை - சுபத்திரன் வீட்டிலே; கூர் உகிர் விடுத்தது ஓர் கோலம் மாலையை - கூரிய நகத்தால் வலிய மலர்த்திப் புனைந்த ஒரு செங்கழுநீர் மாலையை; பேர் இசை வீணையில் சூட்டி - நல்லிசையை எழுப்பும் வீணையிலே சூட்டி; உலகு உணர் கடவுள் - உலகு உணர்ந்த கடவுளை; பெண் கொடிக் காரிகை பாடும் - பெண் கொடியாகிய காரிகை பாடுவாள்.
|
|
|
(வி - ம்.) ஊர்ந்தனர்: முற்றெச்சம். ”தண்கயத் தமன்ற ஒண்பூங்குவளை அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி” என்றும் (அகநா. 180) ”காலமன்றியும் கையினெரித்த கழுநீர்க் குவளை” (பெருங். 1-35 : 1834) என்றும் பிறசான்றோர் கூறுதல் நோக்கி மாலை என்றது செங்கழுநீர் மாலை எனப்பட்டது.
|
|
|
காரிகை : கேமசரி; ஆகுபெயர். உலகு - உயர்ந்தோர் .
|
( 55 ) |