கேமசரியார் இலம்பகம் |
829 |
|
|
வேறு
|
|
|
(இ - ள்.) வீங்கு ஓத வண்ணன் - பொங்கும் கடல் நிறத்தவனாகிய; விரை ததும்பு பூம்பிண்டித் தேங்கு ஓதம் முக்குடைக்கீழ்த் தேவர் பெருமானை - மணம் கமழும் மலர்ப்பிண்டியின் அடியிலே தங்கிய குளிர்ச்சியை உடைய முக்குடையின் கீழ் எழுந்தருளிய வானவர் ்தலைவனை; தேவர் பெருமானை -; தேன் ஆர் மலர் சிதறி - வண்டுகள் பொருந்திய மலர்களை யிட்டு; நாவின் நவிற்றாதார் வீட்டு உலகம் நண்ணார் - நாவினாற் கூறாதார் வீட்டுலகை அடையார்.
|
|
(வி - ம்.) எனவே, நவிற்றுவோர் வீட்டுலகம் நண்ணுவர் என்பதாயிற்று.
|
|
”அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் |
|
|
பிறவாழி நீந்தல் அரிது” (குறள். 8) |
|
|
என்றார் வள்ளுவனாரும்.
|
|
முக்குடை : சந்திராதித்தம், நித்திய வினோதம், சகலபாசனம் என்பன. ஓதவண்ணம் : நேமிநாதர்.
|
( 56 ) |
|
(இ - ள்.) அடல் வண்ண ஐம்பொறியும் அட்டு உயர்ந்தார் கோமான் - உயிரை வருத்தும் இயல்பையுடைய ஐம்பொறிகளையும் வென்று மேம்பட்ட முனிவர்கள் தலைவன்; கடல் வண்ணன் - கடல் நிறத்தான்; முக்குடைக் கீழ்க் காசு இன்று உணர்ந்தான் - முக்குடையின் கீழ் அமர்ந்த குற்றமில்லாது உணர்ந்தவன்; காசின்றுணர்ந்தான் கமல மலரடியை - அப்பெருமானுடைய தாமரை மலர்போலும் அடியை; மாசு இன்றிப் பாடாதார் வான் உலகம் நண்ணாரே - குற்றமின்றிப் பாடாதவர் விண்ணுலகை அடையமாட்டார்.
|
|
(வி - ம்.) காசு - ஐயந்திரிபு. மாசு - காமவெகுளி மயக்கம். வானுலகம் - வீடு.
|
|
”பொறிவாயிலைந்தவிந்தான்” என்பது பற்றி ஐம்பொறியும் அட்டு உயர்ந்தோர் கோமான் என்றார். பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவி என்பன. அவற்றை அடலாவது தத்தமக்குரிய புலன்களில் செல்லாது அடக்குதல்.
|
( 57 ) |