பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 831 

   வித்தகன் - சதுரப்பாடுடையவன். இன்னே - இப்பொழுதே. உரைத்தாள் என்பது வேண்டிப்பரவினள் என்பதுபட நின்றது.

( 59 )

வேறு

 
1471 நிலந்தினக் கிடந்தன நிதியந் நீணகர்ப்
புலம்பறப் பொலிவொடு புக்க காலையே
யிலங்குபூங் கொடியன வேழை நோக்கமு
முலங்கொடோ ளுறுவலி நோக்கு மொத்தவே.

   (இ - ள்.) நிலம் தினக் கிடந்த அன நிதி - மண் தின்னுமாறு கிடந்த செல்வத்தையுடைய; அந்நீள் நகர் - அப் பெரிய மனையிலே; புலம்பு அறப் பொலிவொடு புக்க காலை - அம் மனையிலுள்ளோரின் வருத்தம் நீங்க அழகுறச் சீவகன் புகுந்தபோது; உலம்கொள் தோள் உறுவலி நோக்கும் - கற்றூண் போன்ற தோளையுடைய மிகுவலியுடைய சீவகன் பார்வையும்; இலங்கு பூங்கொடி அன ஏழை நோக்கமும் - விளங்கும் பூங்கொடி போன்ற கேமசரியின் பார்வையும்; ஒத்த - ஒன்றுபடப் பொருந்தின.

 

   (வி - ம்.) நிலத்தினக் கிடந்தன நிதியம் என்றது அழிவின்றி மிக்குக் கிடக்கும் நிதியம் என்பதுபட நின்றது. அஃகா வியல்பிற்றாய செல்வம் தங்கிக் கிடத்தற்குக் காரணங் கூறுவார் நச்சினார்க்கினியர் அறத்தால் தேடின பொருள் என்று நுண்ணிதின் உரைத்தனர்.

 

   நிதியந் நீள்நகர் என்புழி மகரவீறு கெடாமல் நகர வீறாய்த் திரிந்து நின்றது.

 

   பெண்டிரின் மென்மைப் பண்பு குறித்த ஏழை என்னும் சொல்லால் கேமசரியையும் ஆடவரின் வன்மையைக் குறித்த உறுவலி என்னுஞ் சொல்லால் சீவகனையுங் கூறிய நயமுணர்க. அவளைப் பூங்கொடி என்றும் அவனை உலங்கொள்தோள் உடையன் என்றலும் உணர்க. உறுவலி : அன்மொழித்தொகை : சீவகன்.

( 60 )

வேறு

 
1472 கண்ணுறக் காளையைக் காண்டலுங் கைவளை
மண்ணுறத் தோய்ந்தடி வீழ்ந்தன மாமையு
முண்ணிறை நாணு முடைந்தன வேட்கையு
மொண்ணிறத் தீவிளைத் தாளுருக் குற்றாள்.

   (இ - ள்.) காளையைக் கண்உறக் காண்டலும் - காளையை அங்ஙனம் அவள் எதிர்ப்படக் கண்டாளாக; கைவளை மண்உறத்தோய்ந்து அடி வீழ்ந்தன - கையில் இருந்த வளைகள் மண்உறப் பொருந்திக் காலடியிலே வீழ்ந்தன; மாமையும் உள்நிறை