| கேமசரியார் இலம்பகம் |
833 |
|
|
| 1475 |
நினைப்பரு நீணிறை நிப்புதி சோ்ந்தாங் | |
| |
கினத்திடை யேறனை யானெழி னோக்கிப் | |
| |
புனக்கொடி பொற்பொடு புண்ணிய நம்பி | |
| |
வனப்பினை யேகண்டு வாட்க ணகன்றாள். | |
|
|
(இ - ள்.) நினைப்ப அரு நீள் நிறை நிப்புதி ஆங்கு சேர்ந்து - நினைப்பில் அடங்காத பெருங் கற்பினளாகிய நிப்புதி ஆங்கு வந்து; இனத்திடை ஏறனையான் எழில் நோக்கி - ஆவின் திரளிடையே நிற்கின்ற ஏறுபோன்ற சீவகனின் அழகைப் பார்த்து; புனக்கொடி பொற்பொடு புண்ணிய நம்பி வனப்பினையே கண்டு - புனத்திற் கொடிபோன்ற கேமசரியின் அழகுடன் சீவகனின் அழகையுமே ஒப்பிட்டுப் பார்த்து; வாள்கண் அகன்றாள் - வாளனைய கண்கள் உடம்பெல்லாம் பெற்றாற் போலானாள்.
|
|
|
(வி - ம்.) 'ஏறனையான் எழில் புனக்கொடி பொற்பொடு நோக்கி' என முன்னர்க் கூட்டிப், பின்னர், 'புண்ணிய நம்பி வனப்பினையே பார்த்து வாட்கண் அகன்றாள்' என்பர் நச்சினார்க்கினியர்.
|
|
|
நிப்புதி : நிஸ்ப்ருதி என்பதன் திரிபு என்பர். வாட்கண்ணாள் மீண்டுபோனாள் என்றும் உரைக்கலாம்.
|
|
|
மகளிர் கூட்டத்தினிடையே நின்றமை கருதி இனத்திடை ஏறனையான் என்றார்.
|
( 64 ) |
| 1476 |
வள்ளலை வாசநெய் பூசி மணிக்குடத் | |
| |
தௌ்ள னீர்சொரிந் தாட்டினர் தேம்புகை | |
| |
யுள்ளுற வுண்ட கலிங்க முடுத்தபின் | |
| |
கள்ளவிழ் கண்ணி கலத்தொ டணிந்தார். | |
|
|
(இ - ள்.) வள்ளலை வாச நெய்பூசி - சீவகனை மணமுறும் நெய்யைப் பூசி. மணிக்குடம் தௌ் அறல் நீர் சொரிந்து ஆட்டினர் - மணிக்குடத்திலிருந்து தௌ்ளிய அறலையுடைய நீரைப் பெய்து ஆட்டினர்; தேம் புகை உள்உற உண்ட கலிங்கம் உடுத்த பின் - பிறகு, இனிய புகையைத் தன்னிடம் கொண்ட ஆடையை அவன் உடுத்திய பின்னர்; கள் அவிழ் கண்ணி கலத்தொடு அணிந்தார் - (மகளிர் அவனுக்குத்) தேன் சொரியும் கண்ணியையும் பூண்களையும் அணிவித்தனர்.
|
|
|
(வி - ம்.) தானே வலியவந்து கேமசரிக்குத் தன்னையே வழங்கினமை கருதி 'வள்ளலை என்றார். கலிங்கம் - கலிங்க நாட்டில் நெய்யப்பட்டதோர் ஆடையைக் குறித்துப் பின்னர் ஏனைய ஆடைக்கும் பொதுவாய் நின்றதொரு சொல்.
|
|
|
கண்ணி - தலையிற் சூட்டுமாலை. கலத்தொடு - ஆபரணத்துடன்.
|
( 65 ) |