பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 84 

   (வி - ம்.) ஊழ்: ஊழியெனத் திரிந்தது; முறைமைப்பட அலர்ந்து நாறும். இளஃகும் - இளகும்: செய்யுள் விகாரம்.

( 120 )
150 முத்தம் வாய்பு ரித்தன மொய்க திர்ப்ப சும்பொனாற்
சித்தி ரத்தி யற்றிய செல்வ மல்கு பன்மணி
பத்தி யிற்கு யிற்றிவான் பதித்து வைத்த போல்வன
வித்தி றத்த பந்தெறிந் திளைய ராடு பூமியே.

   (இ - ள்.) இளையர் பந்து எறிந்து ஆடு பூமி - இளநங்கையர் பந்து வீசி ஆடும் இடங்கள்; முத்தம் வாய் புரித்தன - முத்தை விளிம்பிலே அழுத்தப்பெற்றன; மொய்கதிர்ப் பசும்பொனால் சித்திரத்து இயற்றிய - பேரொளியுடைய புதிய பொன்னால் அழகுறச் செய்யப்பட்டன; செல்வம் மல்கு பன்மணி பத்தியின் குயிற்றி - செல்வம் நிறைந்த பலவகை மணிகள் பத்தியாகப் பதிக்கப்பெற்று; வான் பதித்துவைத்த போல்வன இத்திறத்த - வானுலகை இவ்வுலகிலே இருத்தினாற் போன்றனவாகிய இவ்வகையின.

( 121 )
151 வைத்த பந்தெ டுத்தலு மாலை யுட்க ரத்துலுங்
கைத்த லத்தி னோட்டலுங் கண்ணி நெற்றி தீட்டலும்
பத்தி யிற்பு டைத்தலும் பைய ரவ்வி னாடலு
மித்தி றத்த பந்தினோ டின்ப மெல்லை யில்லையே.

   (இ - ள்.) வைத்த பந்து எடுத்தலும் - நிலத்தில் வைத்த பந்தைக் கையால் தொடாமல் காலால் தட்டி யெடுத்தலும்; மாலையுட் கரத்தலும் - மாலையில் மறைத்தலும்; கைத்தலத்தின் ஓட்டலும் - கையிற் கொள்ளலும் செல்ல ஓட்டுதலும்; கண்ணி நெற்றி தீட்டலும்- கண்ணியையுடைய நெற்றியிலே தீட்டலும்; பத்தியின் புடைத்தலும் - ஒரு முறைக்கு ஒருமுறை உயரப் பத்தியாக அடித்தலும்; பைஅரவின் ஆடலும் - தாம் நிலையிலே நின்று படமெடுத்த பாம்புபோலப் பரந்து உலாவுமாறு அடித்தலும் ஆகிய; இத்திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லை - இவ்வகையினவாகிய அப் பந்தினோடு உண்டான இன்பம் முடிவில்லை.

( 122 )
152 கூற்ற மன்ன கூர்நுதிக் குருதி வான்ம ருப்பிடைச்
சீற்ற முற்ற மன்னர் தஞ் சென்னி பந்த டிப்பன
வூற்றி ருந்த மும்மதத் தோடை யானை பீடுசால்
காற்றி யற்பு ரவிதோ் கலந்து கவ்வை மல்கின்றே.

   (இ - ள்.) கூற்றம் அனன கூர்நுதிக் குருதிவான் மருப்பிடை - கூற்றுவனைப் போன்றனவாகிய, கூரிய நுனியையுடைய குருதி தோய்ந்த கொம்புகளிலே ; சீற்றம் உற்ற மன்னர்தம்