| கேமசரியார் இலம்பகம் |
846 |
|
|
| 1499 |
கொந்தழல் வேற்க ணாலென் | |
| |
னாவிகூட் டுண்ட கொம்பே | |
| |
செந்தழை யலங்க லேந்திச் | |
| |
சீறடி பரவ வந்தே | |
| |
னுய்ந்தினிப் பணிசெய் வேனோ | |
| |
வுடம் பொழித் தேகு வேனோ | |
| |
பைந்தழை யல்குற் பாவாய் | |
| |
பணியெனப் பரவி னானே. | |
|
|
(இ - ள்.) கொந்து அழல்வேற்கணால் என் ஆவி கூட்டுண்ட கொம்பே - எரியும் அழலையுடைய வேலனைய கண்களினால் என் உயிரைக் கொள்ளை கொண்ட மலர்க்கொம்பே!; செந்தழை அலங்கல் ஏந்திச் சீறடி பரவ வந்தேன்- செவ்விய தழையையும் மாலையையும் ஏந்தி நின் சிற்றடிகளை வணங்க வந்தேன்; இனி உய்ந்து பணிசெய்வேனோ - இனி உயிருடன் இருந்து நின் ஏவல் செய்யக்கடவேனோ?; உடம்பு ஒழித்து ஏகுவேனோ - இறந்து படக் கடவேனோ?; பைந்தழை அல்குல் பாவாய் - பசிய தழைகளை யுடுத்த அல்குலையுடைய பாவையே!; பணியெனப் பரவினான் - (இரண்டில் ஒன்றினை) அருளிச்செய்க என்று புகழ்ந்தான்.
|
|
|
(வி - ம்.) துகிலும் மேகலையுஞ் சீர்பெறப் புனையுங் காலத்தும் பைந்தழை புனைதல் பழைமையின் குறப்புப்போலும். சீவகன் கிளியை ஒட்டப் பிரிந்தானாக, அவள் அப்பிரிவைப் பொறாது ஊடினாள். எனவே, புலவி தீர்க்கவேண்டியதாயிற்று.
|
|
|
கொம்பு : ஆகுபெயர்; விளியேற்றது. நின்னுடைய வாயுடைய தென்னுடைய வாழ்வென்பான் பணி என்றான்.
|
( 88 ) |
| 1500 |
வீணையுஞ் குழலும் பாலு | |
| |
மமுதமுங் கரும்புந் தேனும் | |
| |
பாணியாழ் கனியும் வென்ற | |
| |
பைங்கிளி மழலைத் தீஞ்சொல் | |
| |
வாணிக மகளிர் தாமே | |
| |
வாணிகம் வல்ல ரென்னாப் | |
| |
பூண்முலை பொதிர்ப்பப் புல்லிப் | |
| |
புனைநலம் பருகி னானே. | |
|
|
(இ - ள்.) வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்புந்தேனும் பாணி யாழ் கனியும் வென்ற - வீணை குழல் யாழ் பால் அமுதம் கரும்பு தேன் இசையுறும் யாழ் கனி ஆகிய இவற்றை
|
|