பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 849 

தான் - குழலிசை போன்ற மொழியாளோடு வளவிய அகிற்புகை யூட்டப்பட்ட அமளியை அடைந்தான்.

 

   (வி - ம்.) மேலைச் செய்யுளில் இன்பநிலையாமையைக்கண்ட திருத்தக்கமுனிவர் இனம்பற்றித் தம் மனத்தே முகிழ்த்த யாக்கை நிலையாமையினை ஞாயிற்றின்பால் வைத்து உலகோர்க்கு நுண்ணிதின் உணர்த்துதல் உணர்க.

 

   கிளவியோடும் : உம் இசை நிறை.

( 92 )
 

   (இ - ள்.) திருத் துயில் பெற்ற மார்பன் - திருமகள் துஞ்சும் மார்பனான சீவகனது; திருந்து தார் உழக்க - அழகிய தார் கலக்குதலாலே; இன்ப வருத்தம் உற்று அசைந்த கோதை - இன்பத்தாற் பிறந்த வருத்தத்தை உற்று இளைத்த கோதையாள்; வாள் ஒளித் தடங்கண் நீலம் பொருத்தலும் - சிறந்த ஒளியுறும் பெருங்கண்களாகிய நீலத்தைக் குவித்த அளவிலே; பொன்னனாளைப் புறக்கணித்து எழுந்துபோகி - அவன் திருவனையாளை நீங்கக் கருதி எழுந்து சென்று ; பருச் சுடர்ப் பவழம் நோன் தாழ் - பேரொளி யுறும் பவழத்தாலாகிய வலிய தாழையுடைய; பல் மணிக் கதவு சேர்ந்தான் - பலவகை மணிகளிழைத்த கதவை அடைந்தான்.

 

   (வி - ம்.) திருமகள் எப்பொழுதும் தங்கும் மார்பன் என்பார் திருத்துயில் மார்பன் என்றார்.

 

   நிலம் பொருத்தல் என்றது இமை கூடுதலை. பொன் : திருமகள்.

( 93 )
1505 அல்லியுட் பாவை யன்னா ளறிவுறா வகையி னொற்றி
மெல்லவே திறந்து நீக்கி மின்னுவிட் டிலங்கு பைம்பூட்
கொல்சின மடங்க லன்னான் கொழுநிதி மாட நீந்திப்
பல்கதிர்ப் பரிதி போலப் பாயிரு ளேகி னானே.

   (இ - ள்.) அல்லியுள் பாவை அன்னாள் அறிவுறா வகையின் ஒற்றி - தாமரை மலரில் திருவைப் போன்றவள் தான் கதவைத்