| கேமசரியார் இலம்பகம் |
852 |
|
|
|
மணிவிளக்கம் மாடத்து இருள் அறுகாறும் ஓடி - எரியும் மணி விளக்கின் ஒளி மாடத்தில் உள்ளவரையில் ஓடி; அருமணியிழந்து ஓர் நாகம் அலமருகின்றது ஒத்தாள் - ஒரு நாகப்பாம்பு தன் படத்திலுள்ள கண்ணாகிய அரிய மணியை இழந்து வருந்துவதனை ஒத்தாள்.
|
|
(வி - ம்.) விளக்கத்தால் மாடத்தில் இருள் அற்ற இடமளவும் என்க. எனவே ஒளிபரவிய அளவில் என்பதாயிற்று. ஓடி என்றது, அவள் மனநிலையைக் காட்டுகின்றது. மணி சீவகனுக்கு உவமை. அலமருதல் - மனச்சுழற்றி எய்துதல்.
|
( 97 ) |
வேறு
|
| 1509 |
யாண்டை யாயைய வஞ்சினெ னாருயி | |
| |
ரீண்டு டம்பொழித் தேக வலிக்குமா | |
| |
னீண்ட தோளவ னேநிறை யானிலேன் | |
| |
றீண்டு வந்தெனத் தேனின் மிழற்றினாள். | |
|
|
(இ - ள்.) ஐய - ஐயனே!; யாண்டையாய் - நீ எங்கு இருக்கின்றாய்?; அஞ்சினென் - யான் தனித்திருக்க அஞ்சுகிறேன்; நீண்ட தோளவனே - நீண்ட தோள்களையுடையவனே!; ஈண்டு உடம்பு ஒழித்து ஆருயிர் ஏக வலிக்கும் - இப்போதே உடம்பைவிட்டுச் சிறந்த உயிர் நீங்கத் துணிகின்றது; யான் நிறை இலேன் - (ஆதலின்) நிறையழிந்தேன்; தீண்டு வந்து என - (இனி) தீண்டுக வந்து என்று; தேனின் மிழற்றினாள் - தேனைப் போல மிழற்றினாள்.
|
|
(வி - ம்.) முன்பும் ஒளிந்து விளையாடும் வழக்கமிருத்தலின், இப்போது அதுவாக எண்ணி, 'யாண்டையாய்' என்றும், 'அஞ்சினேன்' என்றும் கூறினாள். நீண்டதோள் : உத்தம இலக்கணம். 'தீண்டு வந்து' என்பது , 'கண்டேன் சீதையை' என்பதுபோல நின்றது.
|
( 98 ) |
| 1510 |
றனிய ளாவது தக்கது வோசொலாய். | |
| |
கனிகொள் காமங் கலந்துயி ரொன்றலி | |
| |
னினியர் மங்கைய ரென்பது கூறுவாய் | |
| |
பனிகொண் மாமதி போற்பசப் பூரயான் | |
|
|
(இ - ள்.) கனிகொள் காமம் கலந்து உயிர் ஒன்றலின் - கனிவுடைய காமம் தம்மிற் பொருந்தி உயிர் ஒன்றுபடும்போது; மங்கையர் இனியர் என்பது கூறுவாய் - மங்கையர் இனியராயிருப்பர் (அல்லாத இடத்து இனியரல்லர்) என்று முன்னர் நீ கூறுவாய்; பனிகொள் மாமதிபோல் யான் பசப்பு ஊர - பனி மூடிய முழுமதிபோல யான் பசப்புமிகும்படி; தனியள் ஆவது
|