| நாமகள் இலம்பகம் | 
87  | 
  | 
|  156 | 
ஆட லின்ன ரவ்வமு மங்கை கொட்டி நெஞ்சுணப் |  
|   | 
பாட லின்ன ரவ்வமும் பணைமு ழவ்வ ரவமுங் |  
|   | 
கூடு கோலத் தீஞ்சுவைக் கோல யாழ ரவமும் |  
|   | 
வாட லில்ல வோசையால் வைக னாளும் வைகின்றே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆடலின் அரவமும் - கூத்தின் ஒலியும்; அங்கை கொட்டி நெஞ்சுஉணப் பாடலின் அரவமும் - கைகொட்டிக் கேட்போர் நெஞ்சைப் பருகுமாறு பாடும் பாடலின் ஒலியும்; பணைமுழவு அரவமும் - பெரிய முழவின் ஒலியும்; கூடு கோலம் தீஞ்சுவைக் கோலயாழ் அரவமும் - (பிற கருவிகளோடு) கூடும் அழகும் சுவையும் பொருந்திய நரம்பையுடைய யாழின் ஒலியும்; வாடல்இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகின்று - (ஆகிய) குறைதல் இல்லாத ஓசையாலே (அண்ணலுக்கு) நாள்கள்தோறும் நாள்கழியா நின்றது. 
 | 
  | 
| 
    (வி - ம்.) கொட்டி - ஒக்கடித்து (சேரக் கொட்டி) 
 | 
  | 
| 
    இனி, வைகவாயின், ஓசையோடு செல்ல நாளும் கழியா நின்றது என்க. [அண்ணல் என்ற சொல் முன்பாட்டிலிருந்து வருவிக்கப்பட்டது.] 
 | 
  | 
| 
    கோயிலின் சிறப்புக் கூறினார். 
 | 
( 127 ) | 
சச்சந்தன் வரலாறு
 | 
  | 
வேறு
 | 
  | 
|  157 | 
நச்சு நாகத்தி னாரழற் சீற்றத்த |  
|   | 
னச்ச முற்றடைந் தார்க்கமிர் தன்னவன் |  
|   | 
கச்சு லாமுலை யார்க்கணங் காகிய |  
|   | 
சச்சந் தன்னெனுந் தாமரைச் செங்கணான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய சச்சந்தன் எனும் தாமரைச் செங்கணான் - கச்சுப் பொருந்திய முலையார்க்கு ஆசையை உண்டாக்கும் சச்சந்தன் எனப் பெயரிய தாமரை மலரனைய செங்கண்ணான்; அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்தன்னவன் - அச்சத்துடன் புகலடைந்தவர்க்கு அமிர்தம் போன்றவன்; நாகத்தின் நஞ்சு ஆர் அழல் சீற்றத்தன் - அடையாதார்க்குப் பாம்பின் நஞ்சைப்போல நிறைந்த தீயனைய சீற்றமுடையவன். 
 | 
  | 
| 
    (வி - ம்.) [பாம்பின் சீற்றம் நஞ்சு உயிரைப் போக்கும் அளவும் இருந்து பிறகு நீங்கும்.] 
 | 
  | 
| 
    இச் செய்யுளினும் வேந்தற்குரிய அளியும் தெறலும் கூறப்பட்டன. அளியினும் வேந்தற்குத் தெறலே சிறத்தலின் முதற்கண் ”நச்சு நாகத் 
 | 
  |