| கேமசரியார் இலம்பகம் |
874 |
|
|
|
(இ - ள்.) ஈண்டிய நூல் கரை கண்டார் - அறம் பொருந்திய நூல்களைக் கற்றுத் துறைபோய துறவோர்; ஓவாது இரண்டு உவவும் அட்டமியும் பட்டினி விட்டு ஒழுக்கம் காத்தல் தாவாத்தவம் என்றார் - இரண்டு உவாவிலும் அட்டமியிலும் பட்டினியிருந்து ஒழிவின்றி ஒழுக்கங் காத்தலைக் கெடாத தவம் என்றனர்; தண்மதிபோல் முக்குடைக்கீழ்த் தாதை பாதம் - குளிர்ந்த மதியைப்போன்ற முக்குடையின்கீழ் எழுந்தருளிய இறைவன் அடியை; பூவே புகை சாந்தம் சுண்ணம் விளக்கு இவற்றாற் புனைதல் - பூவும் நறுமணப் புகையும் சந்தனமும் சுண்ணப்பொடியும் விளக்கும் என்ற இவற்றாற் புனைதலையும்; இவை பிறவும் பூசனையென்று ஏவா - இவைபோன்றவற்றையும் பூசனை எனக் கூறினர்.
|
|
(வி - ம்.) இரண்டுவவு - அமாவாசையும், பூரணியும். அட்டமி - எட்டா நாள். உவவு - பதினான்கா நாள் என்பாருமுளர். உவா : குறியதன்கீழ் ஆகாரம் குறுகி உகரமேற்று உவவு என்றாயிற்று. கண்டார் பூசனை என்று ஏவா, தவம் என்றார் என இயைக்க.
|
( 136 ) |
| 1548 |
இந்நால்வர் துணைவியராக் காதன் | |
| |
மகனிவனா வுடையார் போகிப் | |
| |
பொன்னார மார்பிற் புரந்தரராய்ப் | |
| |
பூமி முழுது மாண்டு | |
| |
மன்னாகி முக்குடைக்கீழ் வாமன் | |
| |
சிறப்பியற்றி வரம்பி லின்பம் | |
| |
பின்னா விளைவித்துப் பிறவா | |
| |
வுலகெய்தல் பேச லாமே. | |
|
|
(இ - ள்.) இந்நால்வர் துணைவியர் ஆ - இந்த நான்கு பேரும் மனைவியராக; இவன் காதல் மகன் ஆ - இவனே அன்புறும் மகனாக; உடையார் போகி - உடையவர் துறக்கத்தே சென்று; பொன் ஆர மார்பின் புரந்தரராய் - பொன் மாலை பினையுடைய இந்திரராய் அத்துறக்கத்தை யாண்டு; மன் ஆகி பூமி முழுதும் ஆண்டு - பின்னர்ப் பேரரசராய் நிலமுழுதும் ஆண்டு; முக்குடைக்கீழ் வாமன் சிறப்பு இயற்றி - முக்குடைக்கீழ் இறைவனுக்கு வழிபாடு முதலிய சிறப்புக்களைச் செய்து; வரம்புஇல் இன்பம் பின்னா விளைவித்து - 'அதீதாவத்தை' என்னும் வரம்பிலா இன்பத்தைப் பிறகு விளைவித்து; பிறவா உலகு எய்தல் பேசல் ஆம் - பிறவாப் பேரின்ப உலகாகிய வீட்டைப் பெறுதல் உண்மையென்றே உரைக்கலாம்.
|
|
(வி - ம்.) வாமன் - அருக்கடவுள். வரம்பிலின்பம் : இஃது அதீதாவத்தை என்றும் அருகந்தாவத்தை என்றும் வழங்கப்படும். துணைவி
|