பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 879 

   (வி - ம்.) மதிமுனி முகத்தியர் என மாறுக. ஆம்பல் : ஒரு நீர்ப்பூ; இது நிலவில் மலருமியல்புடையதாகலின் மதியின் கதிர் பருகும் ஆம்பல் என்றார்.

   முறுவல் என்றது மகளிர் இன்பத்திற்கு ஆகுபெயர். துனி - துன்பம். கதி - நகரகதி முதலியன. வெவ்வேறு யாக்கைகொண்டுழலுதலால் நாடகம் என்றார்.

   மதியின் கதிரை விரும்பும் ஆம்பல்போல் முகத்தியர் முறுவலை விரும்பினோர் எனக் கோடலே நூலாசிரியர் கருத்தோடியையும் எனல் அடுத்த செய்யுளாலும் உணரலாம்.

( 143 )
1555 நிழனிமிர் நெடுமதி நிகரி றீங்கதிர்ப்
பழனவெண் டாமரை பனிக்கு மாறுபோற்
குழனிமிர் கிளவியார் கோல மஞ்சினார்
தொழநிமிர்ந் தமரராய்த் துறக்க மாள்வரே.

   (இ - ள்.) நிழல் நிமிர் நெடுமதி நிகர் இல் தீம்கதிர் - ஒளிமிக்க பெரிய திங்களின் ஒப்பற்ற இனிய கதிருக்கு; பழனம் வெண் தாமரை பனிக்கும் ஆறுபோல் - வயலில் உள்ள தாமரை வருந்தும் தன்மைபோல; குழல் நிமிர் கிளவியார் கோலம் அஞ்சினார் - குழலிசையினும் மிக்க இனிய மொழியாரின் ஒப்பனைக்கு அஞ்சினோர்; தொழ நிமிர்ந்து அமரராய்த் துறக்கம் ஆள்வர் - பலரும் தொழுமாறு மிக்கு வானவராய்த் துறக்கத்தை ஆள்வர்.

   (வி - ம்.) நிழல் - ஒளி. பழனம் - கழனி. பனித்தல் - வருந்துதல். கோலம் அஞ்சினார் என்றது, அவர் இயல்பாகவே விரும்புதற்குரியரல்லர், அவர் தம் கோலமே விரும்பச்செய்வது, அதனை அஞ்சினோர் என்பதுபட நின்றது.

( 144 )

வேறு

1556 இன்னவா றுறுதி கூறி
  யெரிமணி வயிர மார்ந்த
பொன்னவிர் கலங்க ளெல்லாம்
  பொலிவொடு புகன்று நீட்டிச்
சென்மினீ ரென்று கூற
  வலங்கொண்டு தொழுது சென்றான்
வின்மரீஇ நீண்ட தோளான்
  வெயிற்கட நீந்த லுற்றான்.

   (இ - ள்.) இன்ன ஆறு உறுதி கூறி - இங்ஙனம் நன்மையைக் கூறி; எரிமணி வயிரம் ஆர்ந்த பொன் அவிர் கலங்கள் எல்லாம் - ஒளிவிடும் மணியும் வயிரமும் பொருந்திய பொன்