பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 886 

யான காயையுடைய குலைகளுடன் கூடிய அவரையும்; அருவி ஐவனம் கரும்பும் அடக்கருங் கவைக்கதிர் வரகும் - அருவியால் விளைந்த ஐவன நெல்லும் கரும்பும் அடங்காமற் கிளைத்த கதிர்களையுடைய வரகும்; உருவ எள் பயறு உழுந்தும் அல்லவும் எல்லை இன்று உள - அழகிய எள்ளும் பயறும் உழுந்தும் பிறவுணவுகளும் அளவின்றி உள்ளன.

   (வி - ம்.) 'கருவித்தேன்' பாடமாயின் தொகுதியையுடைய தேன் என்க.

   கருவி அல்லது கைத்தளம் என்பது ஒருவகைக் கேடகம். கருவியும் தேனடையும் இறுங்குக்கு உவமை. அவரைக் குலைக்கு யானைப்பழுவெலும்பு உவமை. 'மதமால் யானைப் பழுக்குலை அவரை' (திருவிளை. நாட்டு - 29.)

( 5 )
1562 யானை வெண்மருப் புலக்கை யறையுர லைவன மிடித்த
தேனெய் வாசவற் குவவித் தீங்கனிவாழையின் பழனு
முனை யுண்டவருருகும் பசுந்தினைப் பிண்டியு மொருங்கே
மானி னோக்கியர் நோக்கி வழிதொறு மீவதவ் வழியே.

   (இ - ள்.) யானை வெண் மருப்பு உலக்கை அறை உரல் ஐவனம் இடித்த - யானையின் வெள்ளிய கொம்பாகிய உலக்கையாலே பாறையாகிய உரலில் ஐவன நெல்லை யிடித்த; தேன் நெய்வாசவல் குவவி - தேனாகிய நெய்யைக் கலந்த புதிய அவலைக்குவித்து; தீ கனி வாழையின் பழனும் - இனிய பழமாகிய வாழைப் பழத்தையும்; உண்டவர் ஊன் உருகும் பசுந்தினைப் பிண்டியும் - உண்டவர் மெய்யுருகும் புதிய தினைமாவையும்; மானின் நோக்கியர் நோக்கி - மானனைய கண்ணார் (பசித்தவரை) நோக்கி; வழிதொறும் ஒருங்கே ஈவது அவ்வழி - வழிகள் தோறும் ஒருங்கே கொடுக்குந் தன்மையுடையது சீவகன் செல்ல முற்பட்ட வழி.

   (வி - ம்.) பாசவல் என்பது வாசவல் என விகாரப்பட்டது. பசுமை+அவல்; பாசவல், பசுமை - புதுமை. புதிய நெல்லாவது அறுத்த அண்மையிலுள்ள நெல். ஊனை : ஐ : அசை.

( 6 )
1563 குறிஞ்சி யெல்லையி னீங்கிக்
  கொடிமுல்லை மகண்மொழிந் தாடச்
செறிந்த பொன்னிதழ்ப் பைந்தார்க்
  கொன்றையஞ் செல்வதற்குக் குரவ
மறிந்து பாவையைக் கொடுப்பத்
  தோன்றி யஞ்சுட ரேந்து
நிறைந்த பூங்குருந் துகுதே
  னீர்பெய் தார்த்தன சுரும்பே.