| கனகமாலையார் இலம்பகம் | 
887  | 
 | 
  | 
| 
    (இ - ள்.) குறிஞ்சி எல்லையின் நீங்கி - சீவகன் (அத்தகைய) குறிஞ்சி நில எல்லையை நீங்க; கொடி முல்லை மகள் மொழிந்து ஆட - முல்லைக் கொடி மகட் பேசிச் செல்லுதலின்; குரவம் அறிந்து - அதனைக் குரவம் உணர்ந்து; செறிந்து பொன் இதழ்ப் பைந்தார்க் கொன்றைஅம் செல்வற்குக் கொடுப்ப - நெருங்கிய பொன்போலும் இதழையுடைய புதிய மலர் மாலையையுடைய கொன்றையாகிய செல்வனுக்குக் கொடுப்ப; தோன்றி அம்சுடர் ஏந்த - செங்காந்தள் அம் மணத்திற்கு அழகிய விளக்கை எடுப்ப; சுரும்பு நிறைந்த பூங்குருந்து உகுதேன் நீர் பெய்து ஆர்த்தன - வண்டுகள் நிறைந்துள்ள அழகிய குருந்தினின்றும் சிந்துகின்ற தேனாகிய நீரை வார்த்து ஆரவாரித்தன. 
 | 
| 
    (வி - ம்.) முல்லைக் கொடி கொன்றையினும் குருந்தினும் படர்ந்தது. நடுவே நின்ற குருந்திற் சுரும்பு எழ, அஃது அசைந்து தேனைச் சொரிந்ததனாற் சுரும்பைப் பாவைக்குத் தந்தையாக்கினார். 
 | 
( 7 ) | 
|  1564 | 
அரக்குண் பஞ்சிக டிரட்டி |   |  
|   | 
  யருமணி மரகதப் பலகைப் |   |  
|   | 
பரப்பி யிட்டன போலக் |   |  
|   | 
  கோபங்கள் பயிர்மிசைப் பரவ |   |  
|   | 
வுரைத்த மென்றயிர்ப் பித்தைக் |   |  
|   | 
  கோவலர் தீங்குழ லுலவ |   |  
|   | 
நிரைக்கண் மாமணி கறங்க |   |  
|   | 
  நீணிலங் கடந்தன னெடியோன். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அரக்கு உண் பஞ்சிகள் திரட்டி - செம்பஞ்சையுருட்டி; அருமணி மரகதப் பலகைப் பரப்பியிட்டன போல - அரிய மணியாகிய மரகதத்தாலாகிய பலகையிலே பரப்பினாற் போல; கோபங்கள் பயிர்மிசைப் பரவ - இந்திர கோபங்கள் பயிர்களின் மேலே பரவ; உரைத்த மென் தயிர்ப்பித்தைக் கோவலர் தீ குழல் உலவ - வார்த்த தயிர் பூசப்பெற்ற மெல்லிய மயிரினையுடைய கோவலர் ஊதும் குழலோசை பரவ; நிரைக்கண் மாமணி கறங்க - ஆனிரையிலே மணிகள் ஒலிக்க; நெடியோன் நீள் நிலம் கடந்தனன் - சீவகன் அம்முல்லை நிலத்தையும் கடந்தான். 
 | 
| 
    (வி - ம்.) அரக்கு - சாதிலிங்கம், பயிருக்கு மரகதப் பலகை உவமை. இந்திர கோபம் செம்பஞ்சிக்குவமை. இந்திரகோபம் கார் காலத்தே தோன்றும் ஒருவகைப் புழு. எனவே முல்லை நிலத்திற்குரிய கார்ப்பொழுதும் கூறினாராயிற்று. தயிர் உரைத்த மென்பித்தைக் கோவலர் என்க. பித்தை - ஆண் மயிர். உரைத்தல் - தடவிக்கோடல். கறங்குதல் - ஒலித்தல். நெடியோன் - ஈண்டுச் சீவகன். 
 | 
( 8 ) |