பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 888 

1565 வள்ளி வாரிய குழியின்
  வளர்பொன்னும் வயிரமு மிமைக்குஞ்
சுள்ளி வேலியி னீங்கித்
  துறக்கம்புக் கிடுமெனச் சூழ்ந்து
வெள்ளி வெண்டிரள் விசித்து
  நிலத்தொடு தறிபுடைத் தவைபோற்
றுள்ளி வீழுய ரருவி
  வனகிரி தோன்றிய தவணே.

   (இ - ள்.) வள்ளி வாரிய குழியின் வளர் பொன்னும் வயிரமும் இமைக்கும் - வள்ளிக் கிழங்கை அகழ்ந்த குழியிலே பொன்னும் வயிரமும் ஒளிவிடுவதும்; சுள்ளி வேலியின் நீங்கி - மராமரத்தின் வேலியினின்றுந் தப்பி; துறக்கம் புக்கிடுமெனச் சூழ்ந்து - துறக்கத்திலே சென்று விடுமென எண்ணி; வெள்ளி வெண்திரள் விசித்து - வெள்ளிக் கம்பிகளைத் தலையிலே பூட்டி; நிலத்தொடு தறி புடைத்தவை போல் - நிலத்திலே தறியைப் புடைத்துக் காட்டினாற் போல்; துள்ளி வீழ் உயர் அருவி வனகிரி அவண் தோன்றியது - நாற்றிசையினும் துள்ளி வீழும் அருவிகளையுடையதுமான வனகிரி அங்கே தோன்றியது.

   (வி - ம்.) பொன்னும் வயிரமும் இமைக்கும் வனகிரி, அருவிகளையுடைய வனகிரி என்க.

   வள்ளி - ஒருவகைக் கிழங்கு. வாரிய - அகழ்ந்த. வனகிரி, வானுறவளர்தலின் மேலும் வளர்ந்து துறக்கத்தே புகாதபடி தடைசெய்தற் பொருட்டு வெள்ளிக் கம்பிகளை அதன் தலையிலே பூட்டி நிலத்தொடு கட்டிவைத்தாற்போலத் தோன்றின அதன் உச்சியினின்று வீழும் வெள்ளிய அருவிகள் என்க.

( 9 )
1566 அண்ண றான்செலு முன்னா
  லணிமலர்ப் பூம்பொழி லதனுள்
வண்ண மாச்சுனை மாநீர்
  மணிதெளித் தனையது ததும்பித்
தண்ணென் றாமரை கழுநீர்
  நீலத் தாதவி ழாம்ப
லெண்ணில் பன்மலர் கஞலி
  யினவண்டு பாண்முரன் றுளதே.
அணிகல வரவத் தாலு
  மமிழ்துறழ் நாற்றத் தாலும்
பணிவருஞ் சிங்க நோக்கிற்
  பணையெருத் துறழ நோக்கி
மணிமலர் நாகஞ் சார்ந்து
  வழையொடு மரவ நீழற்
றுணிவருஞ் சாய னின்றா
  டோன்றறன் கண்ணிற் கண்டான்.

   (இ - ள்.) அண்ணல் தான் செலும் முன் - சீவகன் செல்லும் வழியில் வனகிரிக்கு முன்னர்; அணி மலர்ப் பூம் பொழிலதனுள் - அழகிய மலர்களையுடைய மலர்க்காவிலே;