| கனகமாலையார் இலம்பகம் |
893 |
|
|
|
(இ - ள்.) முகை நெறித்தனைய உண்கண் குறு நெறி பயின்ற கூந்தல் - அரும்பை அலர்த்தினால் ஒத்த கண்களையும் குறுமையாக நெறித்தல் கொண்ட கூந்தலையும் உடைய அவள்; குறும்பல்கால் ஆவி கொள்ளா - நெருங்கப் பலமுறை கொட்டாவி கொண்டு; சேர்துகில் தானை சோர - மேற் போர்த்த துகிலுடன் உடுத்த தானையும் நெகிழ; முன் முறுவல் சிறிய தோற்றா - அக் காமன் எய்வதற்கு முன்னாக முறுவலைச் சிறியவாகத் தோற்றுவித்து; சிறுநுதல் புருவம் ஏற்றா - சிறிய நெற்றியிலே புருவத்தையும் ஏற்றுவித்து (வில்லை வளைத்து); அறியுநர் ஆவி போழும் அநங்கன் ஐங்கணையும் எய்தாள் - அறிஞர்களின் உயிரையும் பிளக்கும் காமனுடைய ஐந்தம்பையும் தான் எய்தாள்.
|
|
(வி - ம்.) 'அறியுநர் ஆவி போழும் அம்பு' எனவே, இவன் நெஞ்சு தன் தன்மை சிறிது திரிகின்றமை பெற்றாம்.
|
( 16 ) |
| 1573 |
வடுப்பிள வனைய கண்ணாள் | |
| |
வல்லவ னெழுதப் பட்ட | |
| |
படத்திடைப் பாவை போன்றார் | |
| |
நோக்கின ளாகி நிற்ப | |
| |
வடிப்பொலிந் தார்க்குஞ் செம்பொ | |
| |
னணிமணிக் கழலி னானம் | |
| |
மடத்தகை குறிப்பு நோக்கி | |
| |
மனத்திது சிந்திக் கின்றான். | |
|
|
(இ - ள்.) வல்லவன் எழுதப்பட்ட படத்திடைப் பாவை போன்று - கைவல்லானால் எழுதப்பட்ட படத்திலே ஓவியப் பாவைதான் அழியுமளவும் ஒரு நோக்காய் நின்று அழிவதைப் போல; வடுப் பிளவு அனைய கண்ணாள் - மாவடுவின் பிளவு போன்ற கண்ணாள்; ஓர் நோக்கினள் ஆகி நிற்ப - இவனைக் கூடுவதாகிய ஒரே கருத்துடன் நிற்ப; அம் மடத்தகை குறிப்பு - அவ் விளநங்கையின் எண்ணத்தை; அடிப் பொலிந்து ஆர்க்கும் செம்பொன் அணி மணிக் கழலினான் நோக்கி - அடியிலே அழகுற்ற ஆரவாரிக்கும் செம்பொன்னான் ஆகிய மணிக்கழலணிந்த சீவகன் அறிந்து; மனத்து இது சிந்திக்கின்றான் - உள்ளத்திலே இதனை எண்ணுகின்றான்.
|
|
(வி - ம்.) என்றது, தன் தன்மை திரிந்த நெஞ்சினைத் தேற்றுகின்றான் என்றவாறு. அது மேற் கூறுகின்றார்.
|
|
வடு - மாவடு. வல்லவன் - ஓவியத்தொழில் வல்லோன்.ஓர்நோக்கு - கூடவேண்டும் என்னுமொரு நோக்கம். கழலினான் : சீவகன். மடத்தகை : அன்மொழித்தொகை; ஈண்டு அம் மடந்தை என்னு மாத்திரையாய் நின்றது.
|
( 17 ) |