| கனகமாலையார் இலம்பகம் |
894 |
|
|
வேறு
|
| 1574 |
கடிமாலை சூடிக் கருப்பூர முக்கித் | |
| |
தொடைமாலை மென்முலையார் தோடோய்ந்த மைந்தர் | |
| |
கடைமாலை மற்றவரே கண்புதைப்பச் செல்லு | |
| |
நடைமாலைத் திவ்வுலக நன்றரோ நெஞ்சே. | |
|
|
(இ - ள்.) நெஞ்சே! - மனமே!; கடி மாலை சூடி - மண மலர்மாலையைச் சூடி; கருப்பூரம் முக்கி - பச்சைக் கருப்பூரம் கலந்த முகவாசந் தின்று; தொடை மாலை மென்முலையார் தோள் தோய்ந்த மைந்தர் - தொடுத்த மாலை அணிந்த மென்முலை மகளிரின் தோளைத் தழுவிய மைந்தர்கள்; கடைமாலை மற்று அவரே கண் புதைப்பச் செல்லும் - கடைப்பட்ட நாளிலே வேறாக, அம் மகளிரே தம் கண்களைக் கையால் மூடிக்கொள்ள முதுமையடைந்து செல்லுகின்ற; நடை மாலைத்து இவ்வுலகம் - ஒழுக்க நெறியினை யுடையதாகிய இவ்வுலகம்; நன்று! - நல்லது!
|
|
(வி - ம்.) அரோ : அசை. மற்று. வினைமாற்று. அவர் என்றது சாதிபற்றி.
|
|
முக்கி - தின்று. கடைமாலை - இறுதி நாள்களிலே. கிழப்பருவ நாள் மாந்தர்க்கு மாலைப்பொழுது போறலின் மாலை என்றார். கடை மாலை : பண்புத்தொகை. மாலைத்து - இயல்புடைத்து. நன்று என்றது இகழ்ச்சி.
|
( 18 ) |
| 1575 |
நாவி யகல மெழுதி நறுநுதலா | |
| |
ராவி தளிர்ப்ப வவர்தோண்மேற் றுஞ்சினார் | |
| |
தூவியொழி புள்ளிற் றோன்றித் துயருழப்பக் | |
| |
காவிநெடுங் கண்புதைத் தாங்ககல்வர் நெஞ்சே. | |
|
|
(இ - ள்.) நெஞ்சே! - ; நாவி அகலம் எழுதி - புழுகை மார்பிலே பூசி ; நறு நுதலார் ஆவி தளிர்ப்ப அவர் தோள் மேல் துஞ்சினார் - அழகிய நெற்றியினாரின் உயிர் தழைப்ப அவர்களுடைய தோளின்மேலே துயின்றவர்கள்; தூவி ஒழி புள்ளின் தோன்றி - கடை மயிர் கழிந்த பறவை போலே தோன்றி; துயர் உழப்ப - வருந்துதலாலே; காவி நெடுங்கண் புதைத்து - அம் மகளிர்தம் காவிமலர் போன்ற நீண்ட கண்களைப் புதைத்து; ஆங்கு அகல்வார் - அவ்விடத்தினின்றும் விலகிச் செல்வர்
|
|
(வி - ம்.) இதனால் இருதலையும் ஒத்த அன்பின் திறம் கூறினார்.
|
|
நாவி - புழுகு. அகலம் - மார்பு. ஆவி - உயிர். துஞ்சுதல் - ஈண்டுத் தங்குதல் எம் பொருட்டு. தூவி - இறகு.
|
( 19 ) |