பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 896 

   படைப்புக்கடவுளை. மயங்கினார் மருள என்றது இதன்கண் மயங்காத மெய்க்காட்சியாளர் அல்லாத ஏனைய மயக்கமுடையோரெல்லாம் மருளும்படி என்பதுபட நின்றது.

( 21 )
1578 வினைப்பெருந் தச்ச னல்லன்
  மெய்ம்மைநா நோக்க லுற்றா
புலெனக்குற்றுக் கிடந்த தென்றாங்
  கிருகணும் புதைத்து வைக்கு
நினைப்பினாற் பெரிய ரென்னா
  னீந்தினார் கலைக ளென்னான்
மனத்தையுங் குழையச் செத்து
  மாண்பினன் மாதோ வென்றான்.

   (இ - ள்.) மெய்ம்மை நாம் நோக்கல் உற்றால் - உடம்பின் உண்மையை நாம் ஆராயத் தொடங்கினால்; எனக்கு உற்றுக் கிடந்தது என்று - எனக்கு ஆதரவாய் இவ்வுடம்பு கிடந்தது என்று எண்ணும்படி; ஆங்கு இருகணும் புதைத்து வைக்கும் - அப்போது அகக்கண்ணையும் புறக்கண்ணையும் மறைத்து வைக்கின்றனன்; நினைப்பினால் பெரியர் என்னான் - ஆராய்ச்சியால் மிக்கோரென்று நினையாமலும்; கலைகள் நீந்தினார் என்னான் - பல கலைகளையும் கற்றுக் கடந்தவரென்றும் எண்ணாமலும்; மனத்தையும் குழையச் செத்தும் மாண்பினன் - யாவருடைய உள்ளத்தையும் தளரும்படி வெட்டும் தகையினன் (ஆகையால்); வினைப்பெருந் தச்சன் நல்லன் என்றான் - படைக்குந் தொழிலையுடைய தச்சன் நல்லன் என்றெண்ணினன்.

   (வி - ம்.) மாது ஓ : அசைகள்.

   நல்லன் - இகழ்ச்சி. மெய்ம்மை என்றது இயல்பினை. இருகண் அகக்கண்ணும் புறக்கண்ணும் நினைவு ஈண்டு அறிவின்மேனின்றது; ஆகுபெயர். கலைகள் நீந்தனார் என மாறுக. மனத்தையும் என்புழி உம்மை சிறப்பு. அருவமாகிய மனத்தையும் என்பது கருத்து. மான்பினன் - இகழ்ச்சி.

( 22 )
1579 என்றவ னிருப்ப மாத
  ரென்வர விசைப்பி னல்லா
புலொன்றுமற் றுருகல் செல்லா
  னென்றெடுத் தோது கின்றாண்
மன்றலந் தோழி மாருள்
  வனத்திடைப் பண்ணை யாடக்
குன்றிடைக் குளிர்க்கு மின்போற்
  குழாமழை முகட்டிற் செல்வான்.