| கனகமாலையார் இலம்பகம் |
905 |
|
|
|
மாலை - பவதத்தன் மாமி. அல்லல் செய்தேன் என்றது நின்பிரிவாலே அவரெல்லாம் பெரிதும் அல்லலுறாநின்றனர் என்றவாறு.
|
( 35 ) |
| 1592 |
உண்ணு நீர்வேட் டசைந்தே | |
| |
னெனவுரைப்பக் காட்டு ணாடி | |
| |
நண்ணிப் பொய்கை தலைப்பட்டு | |
| |
நற்றா மரையி லையினுட் | |
| |
பண்ணி நீர்கொண்டு வந்தேன் | |
| |
படாமு லைப்பா வாயென் | |
| |
றண்ண லாற்றா தழுதழுது | |
| |
வெந்துருகி நைகின் றானே. | |
|
|
(இ - ள்.) படா முலைப்பாவாய்! - சாயாத முலையையுடைய பாவையே!; உண்ணும் நீர்வேட்டு அசைந்தேன் என உரைப்ப - நீ குடிநீர் விழைந்து இளைத்தேன் என்று கூறியதாலே; காட்டுள்பொய்கை நாடி நண்ணித் தலைப்பட்டு - காட்டிலே பொய்கையிருக்குமிடம் தேடிக் கண்டுபிடித்தடைந்து; நல் தாமரை இலையினுள் பண்ணிநீர் கொண்டு வந்தேன் - அழகிய தாமரை இலையைக் கோலி அதனுள் நீரை ஏந்தி வந்தேன்; என்று - (நின்னைக் கண்டிலேன்,) என்று கூறி; அண்ணல் ஆற்றாது அழுது அழுது வெந்து உருகி நைகின்றான் - பேதையாகிய அவன் அமைதியின்றி அழுது அழுது மனம் வெதும்பி உருகி நைகின்றான்.
|
|
(வி - ம்.) அண்ணல் : இகழ்ச்சிக் குறிப்பு.
|
|
உரைப்ப - நீ கூறுதலாலே என்க. தலைப்பட்டு - கண்டு. தாமரையிலையைப்பண்ணி அதனுள் நீர் கொண்டு வந்தேன் என்க. பண்ணுதல் - குடையாகக் கோலுதல்
|
( 36 ) |
| 1593 |
குழைகொள் வாண்முகத்துக் கோல்வளையைக் | |
| |
காணான் குழைந்தழு கின்ற | |
| |
வழகன் சொல்லுமணி செய்கோதை | |
| |
காமமுங் கண்டுங் கேட்டு | |
| |
முழவுத் தோளான் முறுவ | |
| |
லித்தீங் கேயிரு நீயென் | |
| |
றிழையச் சொல்லி யிளையா | |
| |
னிளையானை யெய்தி னானே. | |
|
|
(இ - ள்.) குழைகொள் வாள்முகத்துக் கோல் வளையைக் காணான் - குழையணிந்த ஒளிசெயும் முகத்தையும் திரட்சியுறும் வளையையும் உடையாளைக் காணானாகி; குழைந்து அழுகின்ற
|