பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 908 

ஆம் - புகழும் ஆகும்; துணைவி ஆக்கும் - காதலியையும் உண்டாக்கும்; இப்பொருள் எய்தி நின்றீர் இரங்குவது என்னை என்றான் - இத்தகைய கல்விப்பொருளை அடைந்திருக்கும் நீர் வருந்துவது ஏன் என்றான்.

   (வி - ம்.) 'புகழும் ஆம் துணைவியாக்கும்' என்பதைப் புகழாம் துணைவியாக்கும்' என்று கொண்டு, 'கீர்த்தி மகளை யுண்டாக்கும்' என்றும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். கற்றல் : அல்லீற்று உடன்பாட்டு வியங்கோள் 'இற்றெனக்கிளத்தல்' (தொல் - கிளவி. 19) என்பது போல். அல்லீறு எதிர்மறை வியங்கோளுக்கும் வரும். 'மகனெனல் - மக்கட்பதடி யெனல்' என்னுங் குறளிற் காண்க.

( 39 )
1596 அன்புநூ லாக வின்சொ லலர்தொடுந் தமைந்த காத
லின்பஞ்செய் காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை
நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்
பின்செலும் பிறார்க ணுள்ளம் பிணையனார்க் கடியதன்றே.
 

   (இ - ள்.) அன்பு நூலாக இன்சொல் அலர்தொடுத்து - அன்பை நூலாகக்கொண்டு இன்சொல்லாகிய பூவை வைத்துக் கட்டி; அமைந்த காதல் இன்பம்செய் சாந்தின் கைபுனைந்து - பொருந்திய காதலாகிய இன்பமுண்டாக்கும் சாந்தினாலே ஒப்பனைசெய்து; ஏற்ற காமமாலை நன்பகல் சூட்டி - தகுதியான காமமாலையை நல்ல பகற்பொழுதினும் அணிவித்து; விள்ளாது ஒழுகினும் - நீங்காமலிருந்தாலும்; நங்கைமார்க்குப் பிறர்கண் பின் உள்ளம் செலும் - பெண்களுக்கு மற்றோரிடத்திலே அவர் பின்னரே மனம் போகும்; பிணையனார்க்கு அடியது அன்றே? - மானனையார்க்கு அவ் வுள்ளம் அடிப்படையாக வுள்ளது அன்றோ?

   (வி - ம்.) 'பகல் - வெளியுமாம்' என்பர் நச்சினார்க்கினியர்.

   இனிய சொல்லாகிய அலர் என்க. அலர் - மலர். காதல் சாந்திற் கைபுனைந்து ஏற்றகாமமாலை என மாறுக. பகற்சூட்டி என்புழி உயர்வு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தாற்றெக்கது. நங்கைமார், இகழ்ச்சி. பிணையனார்க்கு என்றது அவர்க்கு என்னும் சுட்டுப்பெயர்மாத்திரையாய் நின்றது. காதல் இன்பத்தைச் செய்யும் காமமாகிய சாந்தினால் ஒப்பனை செய்து எனப்பொருள் கொள்வது சிறந்தது. அன்பு நூலால் இன்சொல் மலராற் றொடுத்தமாலை என்பது தானே தோன்றுதலால்.

( 40 )
1597 பெண்ணெனப் படுவ கேண்மோ
  பீடில பிறப்பு நோக்கா
வுண்ணிறை யுடைய வல்ல
  வொராயிர மனத்த வாகு