பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 910 

போல்வார்; சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார் - மேலும் தம் கணவனின் துன்பத்தைத் தீர்ப்பார்கள்.

   (வி - ம்.) சொல்லார் : முற்றெச்சம். வாழ்வார் : வினையாலணையும் பெயர், எழுவாயாய் நின்றது. காமனை : ஐ : அசை. இவர்கள் கற்புடை மகளிர்.

( 42 )
1599 அன்னணின் றோழி யையா
  வவளென்னைக் கண்ட கண்ணாற்
பின்னைத்தான் பிறரை நோக்காப்
  பெருமட மாது தன்னை
யென்னையா னிழந்து வாழு
  மாறென விரங்கி னானுக்
கன்னளோ வென்று நக்கா
  னணிமணி முழவுத் தோளான்.

   (இ - ள்.) ஐயா நின்தோழி அன்னள் - ஐயனே! உன் தோழி அத்தகையளே; அவள் என்னைக் கண்ட கண்ணால் - அவள் என்னைப் பார்த்த விழியினால்; தான் பிறரைப் பின்னை நோக்காப் பெருமடமாது - தான் மற்றவரைப் பிறகு பாராத பெருமைமிக்க இளமங்கை; தன்னை இழந்து யான் வாழும் ஆறு என்னை - அவளைப் பிரிந்து யான் வாழும் வகை எங்ஙனம்; என இரங்கினானுக்கு - என்று வருந்திய பவதத்தினின் பேதைமையைப் பார்த்து; அணிமணி முழவுத்தோளான் அன்னளோ என்று நக்கான் - அணியணிந்த அழகிய முழவனைய தோளானாகிய சீவகன் அத்தகையளோ! என்று நகைத்தான்.

   (வி - ம்.) அன்னளோ என்றது யான் கூறியவற்றாலும் தெளிவு நிகழாமல் இவனை வருந்துந் தன்மையளோ என்றவாறு. நகை, பிறர் அறியாமைபற்றி நிகழ்ந்தது. இனி யாம் இவன் இடுக்கணுக்கு உதவி யானோம் என்று மனம் மகிழ்ந்தான் என்றுமாம்.

( 43 )

வேறு

1600 இனையல்வேண் டாவிம் மந்திரத்தை
  யோதிநீ யொருவில் லேவள
வனைய வெல்லை சென்றா
  லியக்கி கொணர்ந் தருளுநீ
புனைசெய் கோல்வளை யைக்கைப்
  படுதியென் றாங்கவன் போதலு
மனைய மாதரைக் கண்டாங்
  கடிபுல்லி வீழ்ந்த ரற்றினான்.