| கனகமாலையார் இலம்பகம் |
917 |
|
|
|
வேல் தன் கண்ணுக்குத் தோற்று மலங்கலின் பகைபெறாது மலர்க்கு ஓலைவிடுதற்குக் காரணமான பேரழுகு படைத்ததன்கண் என்க. ஏலம் - மயிர்ச்சாந்து. ஏழையவர் அன்ன நாடு, ஆலைக் கரும்பின் அகநாடு எனத் தனித்தனி கூட்டுக. கண்டுகேட் டுண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலவின்பமும் தருதலால் நாட்டிற்கு மகளிர் உவமை என்க.
|
( 57 ) |
வேறு
|
| |
|
(இ - ள்.) மள்ளர் - உழவர்; வழைச்சு அறு சாடி மட்டு அயின்று - இளமை அற்ற சாடியிலுள்ள கள்ளைப்பருகி; கழைக்கரும்பு எறிந்துகண் உடைக்கும் எந்திரம் - கழையாகிய கரும்பைக் குறுகத்தறித்துக் கொண்டு வந்து கணு பிளக்கும்படி ஆட்டும் ஆலைகளின் ஒலியை; மழைக்குரல் என மயில் அகவ - முகில் ஒலியென்று மயிர்கள் கூவ; வார் செந்நெல் புழைக்கடைப் புனல் அலைத்து ஒழுகும் பொற்பிற்று - நீண்ட நெல்வயலின் கடைமடையிலே நீரை அலைத்து (ஆலையில் வடியும் கருப்பஞ்சாறு) செல்லும் அழகினது அந் நாடு.
|
|
(வி - ம்.) எந்திரம், ஒழுகும் என்று இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்திற் கேற்றின இடவாகுபெயர்.
|
|
வழைச்சு - இளந்தன்மை. மட்டு - கள். கழைக்கரும்பு - கரும்பினுள் ஒருவகை. கண் - கணு. கரும்பாலை முழக்கத்தை மயில்முகில் முழக்க மெனக் கருதி அகவும் என்பது கருத்து.
|
( 58 ) |
| 1615 |
வாழைச்சறு சாடிமட் டயின்று மள்ளர்தாங் | |
| |
கழைக்கரும் பெறிந்துகண் ணுடைக்கு மெந்திர | |
| |
மழைக்குர லெனமயி லகவ வார்செந்நெற் | |
| |
புழைக்கடைப் புனலலைத் தொழுகும் பொற்பிற்றே. | |
| |
தாமரை மலர்தலை யடுத்துத் தண்கமழ் | |
| |
தூமலர்க் குவளைகா லணைத்துத் தோலடிக் | |
| |
காமரு பெடைதழீஇ யன்னங் கண்படுந் | |
| |
தேமலர்த் தடந்தழீஇத் திசைக்கண் மல்கின்றே. | |
|
|
(இ - ள்.) தாமரை மலர்தலை அடுத்து - தாமரை மலரைத் தலையணையாக் கொண்டு; தண் கமழ் தூமலர்க் குவளை கால் அணைத்து - குளிர்ந்த மணங்கமழும் தூய மலராகிய குவளையைக் காலணையாகச் சேர்த்து; காமரு பெடை தழீஇ - விருப்பூட்டும் பெடையைத் தழுவி; தோல்அடி அன்னம் கண்படும் - தோலடிப் பறவையான அன்னம் துயில்கின்ற; தேமலர்த் தடம்தழீஇத் திசைக்கண் மல்கின்று - தேனையுடைய மலர்த்தடங்களைத் தழுவித் திசையெங்கும் நீர்மல்கியது அந்நாடு.
|