| கனகமாலையார் இலம்பகம் |
927 |
|
|
|
(வி - ம்.) நறா - நற என ஈற்றாகாரம் குறுகிநின்றது. மறவெங்காமம் பாவத்தையுடைய வெவ்விய காமம். பறவைத்தேர் - பறத்தற்றொழிலையுடைய தேர். அறிவன் - அருகன். சரண் - புகலிடம்.
|
( 77 ) |
| 1634 |
வேட்கை யூர்தர விம்முற வெய்திய |
|
| |
மாட்சி யுள்ளத்தை மாற்றி மலர்மிடை |
|
| |
காட்சிக் கின்பொய்கைக் காமார் நலனுண்டு |
|
| |
மீட்டு மங்கிருந் தான்விடை யேறனான். |
|
| |
|
(இ - ள்.) வேட்கை ஊர்தர - வேட்கை மேலிடுதலாலே; விம்முதல் எய்திய - வருத்தம் உற்ற; மாட்சி உள்ளத்தை மாற்றி - மாய்தலையுடைய உள்ளத்தைக் கெடுத்து; மலர்மிடை காட்சிக்கு இன் பொய்கை - மலர்கள் நெருங்கிய பார்வைக்கினிய அப் பொய்கையின்; காமர் நலன் உண்டு - விருப்பூட்டும் அழகைப் பருகியவாறு; மீட்டும் அங்கு விடை ஏறனான் இருந்தான் - பின்னரும் அங்கே விடைகளிற் சிறந்த விடைபோன்றவன் தங்கியிருந்தான்.
|
|
(வி - ம்.) வருத்தத்திற்குக் காரணமாகின்ற இடத்து இருத்தல் அருமை தோன்ற, 'மீட்டும்' என்றார்.
|
( 78 ) |
வேறு
|
| |
| 1635 |
நேரார் நேரு நீணிதி துஞ்சுந் நிறைகோயி |
|
| |
லாரா வெம்போ ராய்தட மித்த னரசற்கு |
|
| |
நாரார் கற்பின் னாகிள வேய்த்தோ ணளினைக்குஞ் |
|
| |
சீராற் றோன்றிச் செல்வமொ டெல்லாந் திருத்தக்கான். |
|
|
(இ - ள்.) நேரார் நேரும் நீள்நிதி துஞ்சும் நிறை கோயில் - பகைவர் திறையாக நல்கும் மிகு செல்வம் தங்கிய, யாவும் நிறைந்த கோயிலையுடைய; ஆரா வெம்போர் ஆய் தடமித்தன் அரசற்கும் - அமையாத கொடும் போரை ஆராயும் தடமித்தன் என்னும் மன்னனுக்கும்; நாரார் கற்பின் நாகுஇள வேய்த்தோள் நளினைக்கும் - அன்பு நிறைந்த கற்பினையும் மிகவும் இளமை பொருந்திய வேயனைய தோளையுமுடைய நளினை யென்பாளுக்கும்; சீரால் தோன்றிச் செல்வமொடு எல்லாம் திருத்தக்கான் - தலைமையோடு பிறந்து செல்வத்துடன் கல்வி முதலிய எல்லாம் அழகுறப் பொருந்தியவன்;
|
|
(வி - ம்.) அடுத்த செய்யுளும் இதுவும் ஒரு தொடர்.
|
|
நேரார் - பகைவர். நேர்தல் - திறையாகத் தருதல். நிதிதுஞ்சுங் கோயில். நிறைகோயில் எனத் தனித்தனி கூட்டுக. ஆய்தடமித்தன் : வினைத்தொகை. தடமித்தன் என்னும் அரசற்கும் என்க. நார்-அன்பு. வினைத்தொகை. தடமித்தன் என்னும் அரசற்கும் என்க. நார் - அன்பு. நாகிளமை : ஒருபொருட் பன்மொழி. நளினை - தடமித்தன் மனைவி.
|
( 79 ) |