பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 929 

பொய்யல ஆற்றால் புகழ் வெய்யோன் சொன்னான் - தான் கூறிய நாடு முதலியவை பொய்யாக நாட்டிக் கொள்ளப்பட்டனவாயினும் பொருளாற் பொய்யல்லாததொரு வழியாலே புகழை விரும்பினோன் புகன்றான.

   (வி - ம்.) இவ்வாறு கூறியதனால் மறைந்தொழுகுதல் பெற்றாம்.

   இந்நாட்டிவ்வூர் இவ்விடம் இவண் வாழ்வார் எய்தார் என்னும் அளவும் விசயன் உட்கோள். எனவே, ஆகவே இவன் இவ்விடத்தான் அல்லன் என்று நினைத்து என்பது எச்சப்பொருள். பொய்ந்நாட்டு - பொய்யாக நாட்டிக்கொள்ளப்பட்டது.

( 81 )
1638 வாமான் றிண்டோ் வள்ளலு முள்ளம் மிகைகொண்டெங்
கோமாற் குய்ப்பன் கொள்பயன் மிக்கான் கொலைவேலா
னேமா றில்லா விந்திர னேயும் மிவனொவ்வான்
போமா றாய்வென் பொற்பொடு கூடும் வகையென்றான்.

   (இ - ள்.) ஏ மாறு இல்லா இந்திர னேயும் இவன் ஒவ்வான் - அம்பு எய்தலில் எதிரில்லாத இந்திர னெனினும் இவனை ஒவ்வான்; கொலைவேலான் கொள்பயன் மிக்கான் - கொலை வேலையுடைய இவன் நம்மாற் கொள்ளப்படும் பயன் மிகுந்தவன் என்று; வாமான் திண்தேர் வள்ளலும் உள்ளம் மிகை கொண்டு - தாவும் பரிபூட்டிய திண்ணிய தேரையுடைய விசயனும் உள்ளத்திலே தன் அறிவின் மிகையாலே கொண்டு, எம் கோமாற்கு உய்ப்பன் - எம் அரசனிடத்திலே இவன் உள்ளத்தைச் செலுத்துவேன்; பொற்பொடு கூடும் வகை போமாறு ஆய்வென் என்றான் - அவ்வாறு அழகுறக் கூடும் வகையிலே இவன் நெஞ்சு செல்லும் வழியை ஆராய்வேன் என்றெண்ணினான்.

   (வி - ம்.) வாமான் - குதிரை. வள்ளல் - ஈண்டு விசயன். உள்ளம் - அறிவு. கோமான் : தடமித்தன். ஏ - எய்யுந்தொழில். உய்ப்பன் - செலுத்துவேன்.

( 82 )
1639 பூங்கழ லானைப் புண்ணிய நம்பி முகநோக்கி
யீங்கிது நின்னா டிப்பதி நின்னூ ரிதுநின்னில்
வீங்கிய திண்டோள் வெல்புக ழாய்நின் கிளையென்றாற்
காங்கது வெல்லா மண்ணலு நோ்ந்தாங் கமைகென்றான்.

   (இ - ள்.) புண்ணிய நம்பி பூங்கழலானை முகம் நோக்கி - விசயன் சீவகன் முகத்தைப் பார்த்து ; வீங்கிய திண்தோள் வெல்புகழாய்! - பருத்த திண்ணிய தோளையும் வெல்லும் புகழையும் உடையாய்!; ஈங்கு இது நின் நாடு இப்பதி நின் ஊர் இது நின் இல் - இங்ஙனம் நட்புக்கொண்டதனால் இந்நாடு, நினது நாடு இவ்வூர் நினது ஊர், எம்அரண்மனை நினது அரண்மனை; நின்