| கனகமாலையார் இலம்பகம் |
932 |
|
|
|
(இ - ள்.) மராமரம் ஏழும் எய்த வாங்கு வில் தடக்கை - ஏழு மராமரங்களையும் வீழ்த்திய வளைந்த வில்லேந்திய பெருங்கையையுடைய; வல்வில் இராமனை வல்லன் என்பது - வலிய வில்லினனாகிய இராமனை வல்லவன் என்று கூறுவது; இசை அலால் கண்டது இல்லை - வாய்மொழியால் அல்லது கண்ணால் கண்டது இல்லை; வாய்மொழியால் அல்லது கண்ணால் கண்டது இல்லை; (இன்று நேரிற் கண்டேன், உராமனம் இவன் கண் இன்றி - இனி நீங்கிச் செல்லும் உள்ளம் இவனிடத்தில் இல்லையாம்படி; உவக்குமா செய்வல் என்று - இவன் மகிழுமாறு செய்வேன் என்று நினைத்து; குராமலர்க் காவின் நீங்கிக் கோயிலே கொண்டு புக்கான் - குராமலர்ப் பொழிலை விட்டு அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.
|
|
(வி - ம்.) இராமன் ஏழு மராமரங்களை ஒரே கணையா லறுத்ததனை இராமாயணத்திற் காணலாம். இசை - சொல். கண்டதில்லை என்றது இவன் அத் தொழிலில் வல்லனாதலைக் கண்ணாற் கண்டேன் என்பது பட நின்றது. உராமனம் இவன்கணின்றி என்றது நீங்காத மனமே இவன்கண் உண்டாகும்படி என்னும் பொருளை யாப்புறுத்தி நின்றது கோயில் - அரண்மனை.
|
( 87 ) |
| 1644 |
வழிவரல் வருத்த மோம்பி | |
| |
வயிரப்பூ ணணிந்த மார்ப | |
| |
னழிகவுள் யானை வேந்தற் | |
| |
கவன்றிற மறியச் சொன்னான் | |
| |
மொழியெதிர் விரும்பி மன்னன் | |
| |
மூரிவிற் றடக்கை யாற்குக் | |
| |
கழிபெரு முகமன் கூறிக் | |
| |
காதலங் காளை யென்றான். | |
|
|
(இ - ள்.) வழிவரல் வருத்தம் ஓம்பி - சீவகனுக்கு வழி நடந்த சோர்வினை நீக்கி; அழிகவுள் யானை வேந்தற்கு - மதம் பெருகும் கவுளையுடைய யானை மன்னனுக்கு; வயிரப்பூண் அணிந்த மார்பன் - வயிர அணிகலன் புனைந்த மார்பனான விசயன்; அவன் திறம் அறியச் சொன்னான் - சீவகன் இயல்பை அறியுமாறுரைத்தான்; மன்னன் மொழி எதிர் விரும்பி - அரசனும் அவன் மொழியை வரவேற்று; மூரி வில் தடக்கையாற்கு - பெரிய வில்லேந்திய சீவகற்கு; கழிபெரு முகமன் கூறி - மிகப் பெரிய முகமன் உரைத்து; காளை! காதலம் என்றான் - காளையே! யாம் நின்மேல் அன்புற்றேம் என்றான்.
|
|
(வி - ம்.) வழிவருதலானே உண்டான வருத்தம் என்க. வருத்தம் ஓம்புதலாவது - வருத்தத்தைத் தீர்த்தல். மார்பன் : விசயன். வேந்தற்கு - தடமித்தனுக்கு. அவன் என்றது சீவகனை. மூரிவில் - பெரிய வில் காதலம் : தன்மைப்பன்மை வினைமுற்று. காளை : விளி
|
( 88 ) |