கனகமாலையார் இலம்பகம் |
933 |
|
|
1645 |
கிலுத்தங்கூர்ப் பரங்க ளென்னு | |
|
மிரண்டினுட் கிலுத்தஞ் சார்ந்து | |
|
நலத்தகு விரல்க ளைந்தி | |
|
னிம்பர்மூ விரலி னீளஞ் | |
|
சிலைத்தழும்பி யானைத் தோலி | |
|
னூற்றுரை சிறுமீ னொத்த | |
|
விலக்கணக் கிடக்கை கண்டே | |
|
யேவினுக் கரச னென்றான். | |
|
(இ - ள்.) கிலுத்தம் கூர்ப்பரங்கள் என்னும் இரண்டினுள் - முன்கைச் சந்து முழங்கைக்கு முன் என்னும் இரண்டினிலே; கிலுத்தம் சார்ந்து - முன்கைச் சந்தைச் சார்ந்து, நலத் தகு விரல்கள் ஐந்தின் இம்பர் - உத்தம இலக்கணத்தை யுடைய விரல்கள் ஐந்திற்கு அருகே; மூவிரலின் நீளம் - மூவிரல் நீளமாக; யானைத் தோலின் நூற்று உரை சிறுமீன் ஒத்த - யானைத் தோலிலே சுண்ணாம்பு நூற்றை உரைத்தாற் போலவும் சிறுமீனைப் போலவும் உள்ள; சிலைத் தழும்பு இலக்கணக் கிடக்கை கண்டே - வில் தழும்பாகிய இலக்கணப் பொருத்தத்தைப் பார்த்து; ஏவினுக்கு அரசன் என்றான் - வில்லுக்குத் தலைவன் என்றான்.
|
(வி - ம்.) யானைத் தோல் காழ்ப்பேறின படியையும், அதிலே நூற்றை யுரைத்தது வெண்மைக்கும், சிறுமீன் தழும்பிற்கும் உவமை.
|
( 89 ) |
1646 |
அண்ணலஞ் சிலைவ லாரு | |
|
ளமோகமா வாசா னிற்பின் | |
|
விண்ணகு வெள்ளி வெற்பின் | |
|
விஞ்சைய ருலகி னல்லான் | |
|
மண்ணகத் தில்லை யென்பார் | |
|
வாயினை மடங்க வந்தான் | |
|
புண்ணகத் துறையும் வேலா | |
|
னெனப்புகழ்ந் தரசன் சொன்னான். | |
|
(இ - ள்.) அண்ணல் அம் சிலைவலாருள் அமோக மா ஆசானின்பின் - தலைமை பெற்ற அழகிய வில்வல்லவர்களில் தப்பாத பெரிய ஆசிரியனுக்குப் பின்னர்; விண் நகு வெள்ளி வெற்பின் விஞ்சையர் உலகின் அல்லால் - வானில் ஒளி தரும் வெள்ளிமலையிலுள்ள வித்தியாதரர் நாட்டின் அல்லாது; மண் அகத்து இல்லையென்பார் வாய்மடங்க - நிலவுலகில் இல்லை யென்பாரின் வாய் அடங்க; புண் அகத்து உறையும் வேலான் வந்தான் என-
|