| கனகமாலையார் இலம்பகம் |
934 |
|
|
|
புண்ணில் வாழும் வேலினான் வந்தான் என்று; அரசன் புகழ்ந்து சொன்னான் - தடமித்த மன்னன் புகழ்ந்து கூறினான்.
|
|
(வி - ம்.) அமோகம் - தப்பாமை, மாஆசான் - பேராசிரியன், ஆசானின் : இன் : ஐந்தனுருபு நான்கன் பொருளில் வந்த உருபு மயக்கம். வாயினை : இன், ஐ : அசைகள்.
|
( 90 ) |
| 1647 |
விற்றிற னம்பி தேற்றான் | |
| |
விருந்தின னிவனு மன்றி | |
| |
மற்றுமோர் நால்வ ருள்ளார் | |
| |
மாண்பினால் வளர்ந்த தில்லை | |
| |
கொற்றநீ கொடுக்கல் வேண்டுங் | |
| |
குறையெனக் குருசி னோ்ந்தா | |
| |
னற்றைநா ளாதி யாக | |
| |
வவர்களும் பயிலு கின்றார். | |
|
|
(இ - ள்.) நம்பி வில்திறல் தேற்றான் - விசயன் விற்பயிற்சி அறியாதவன்; விருந்தினன் - அதற்குப் புதியன்; இவனும் அன்றி மற்றும் ஓர் நால்வர் உள்ளார் - இவனையன்றி வேறு நால்வர் இருக்கின்றனர்; மாண்பினால் வளர்ந்தது இல்லை - அவர்களும் கல்வி மாட்சியுடன் வளர்ந்ததில்லை; கொற்றம் நீ கொடுக்கல் வேண்டும் - இவர்களுக்குக் கல்வியை நீ அளித்தல் வேண்டும்; குறை என இஃது என் வேண்டுகோள் என்று அரசன் கூற; குருசில் நேர்ந்தான் - அதற்குச் சீவகனும் ஒப்பினான்; அற்றை நாள் ஆதி ஆக - அன்று முதலாக; அவர்களும் பயிலுகின்றார் - அவர்களும் அக் கலையைப் பயிலத் தொடங்கினர்.
|
|
(வி - ம்.) நம்பி என்றது விசயனை; மற்றும் ஓர் நால்வர் என்றது இவனுடன் பிறந்தோர் நால்வரையும் என்க. மாண்பு - கல்வி மாட்சி, கொற்றம் - வெற்றி; ஈண்டுக் கல்விக்கு ஆகுபெயர். குருசில் : சீவகன். அவர்களும் - அவ் வைந்து மக்களும்
|
( 91 ) |
வேறு
|
| 1648 |
கழலிற் செந்தா மரையடிகள் | |
| |
புல்லித்தங் காதல் கூர | |
| |
நிழலி னீங்கார் நினைத்தன | |
| |
நினைப்பி னமைவா னாக்கி | |
| |
யழலிற் சாரா தகலா | |
| |
தொழுக வொருநா ளவன்போகிப் | |
| |
பொழிலின் மிக்க தனிற்புக்கான் | |
| |
மணமகளிர் போற்பொ லிந்ததே./span> |
|