| கனகமாலையார் இலம்பகம் | 
939  | 
 | 
  | 
| 
    கொடி : கனகமாலை. நம்பி : சீவகன். வடு - மாம்பிஞ்சு. மலர் - தாமரை மலர். சிலம்பினாள் : கனகமாலை படுவியின் குறிப்பறிந்து கொடுத்தான் என்பது கருத்து. அவளும் எனல் வேண்டிய உம்மைதொக்கது. 
 | 
( 98 ) | 
|  1655 | 
கொண்டு கோதை மலரெழுத்து |   |  
|   | 
  மெல்விரலின் மேற்றாங்கி நோக்கும் |   |  
|   | 
வண்டு சோ்ந்த குழலாள் |   |  
|   | 
  வருமுலைகள் பாய வண்டார் |   |  
|   | 
விண்டு தேன்று ளிப்ப |   |  
|   | 
  வேற்றடங்கண் டாமாடு நாடகங் |   |  
|   | 
கண்டு வாழா தவர்வாழ்க்கை |   |  
|   | 
  யெல்லாஞ் சவரர் வாழ்க்கையே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கோதை கொண்டு மெல்விரலின் மேல் தாங்கி மலர் எழுத்து - அம் மாலையை வாங்கிக் கொண்டு மெல்லிய விரலின் மேல் தாங்கி அம் மாலையில் மலராலாகிய எழுத்தை; வண்டு சேர்ந்த குழலாள் நோக்கும் - வண்டுகள் தங்கிய கூந்தலாள் நோக்குவாள்; வரும் முலைகள் பாய வண்தார் விண்டு தேன் துளிப்ப - (மங்கையரின்) வளரும் முலைகள் பாய்தலினால் மார்பில் அணிந்த வளவிய தார் நெகிழ்ந்து தேன் சிந்த; வேல் தடம் கண் தாம் ஆடும் நாடகம் - வேலனைய பெரிய கண்கள் பிறழும் நாடகத்தை; கண்டு வாழாதவர் வாழ்க்கை யெல்லாம் சவரர் வாழ்க்கை - பார்த்து மகிழ்ந்து வாழாதவர்களின் வாழ்க்கையாவும் வேடருடைய வாழ்வாகும். 
 | 
| 
    (வி - ம்.) நாடகம் - அவர்கள் கவரும் தன்மை. கவர வாழ்தலே வாழ்வு என்றான். 
 | 
| 
    கோதை கொண்டு என மாறுக. மலராலேயே எழுத்துருவம்படப் புனைந்தமையின் மலரெழுத்து என்றார். குழலாள்; கனகமாலை வருமுலை; வினைத்தொகை. கண்தாம் என்புழித்தாம் அசை. சவரர் - வேடர். சவரர் வாழ்க்கை என்றது வேடர் வாழ்க்கை போன்று பயனிலா வாழ்க்கையே என்றவாறு. 
 | 
( 99 ) | 
|  1656 | 
ஆம்ப னாறு மரக்கார் |   |  
|   | 
  பவழ வாயா ரமுதன்னார் |   |  
|   | 
பாம்பு பைத்தாங் கனைய |   |  
|   | 
  பவழப் படவர வல்குலார் |   |  
|   | 
தாம்ப லருமருட் டவகி |   |  
|   | 
  றவழுந் தண்பூ வணைக் |   |  
|   | 
காம்பின் மென்றோள் கவின்வளர |   |  
|   | 
  வைகல் கலப்பென் பவே. |   | 
 
 
 |