பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 948 

1668 அணுகி முன்னின்ற வநங்க
  விலாசினி யங்கை கூப்பிப்
பிணைய னீட்டப் பெருந்தகை
  யஃதே லான்முக நோக்கலுந்
துணையி றோகை யென்னங்
  கைக்குத் தொங்கறொடுப் பாயுநீ
மணிசெய் மென்றோண் மருந்துநீ
  யாருயிரு நீயே லென்றாள்.

   (இ - ள்.) அணுகி முன் நின்ற அநங்க விலாசினி அங்கை கூப்பிப் பிணையல் நீட்ட - அவ்வாறு நெருங்கி அவன் முன்னே நின்ற அநங்க விலாசினி அங்கை குவித்து வணங்கி மாலையை நீட்ட; பெருந்தகை அஃது ஏலான் முகம் நோக்கலும் - சீவகன் அதனை வாங்காமல் அவள் முகத்தைப் பார்த்த அளவிலே; துணை இல் தோகை என் நங்கைக்குத் தொங்கல் தொடுப்பாயும் நீ - (அவளும்) ஒப்பில்லாத மயிலாகிய என் தலைவிக்கு மாலை தொடுப்பாயும் நீயே; மணி செய் மென் தோள் மருந்தும் நீ - மணிக்கலன் புனைந்த மெல்லிய தோள் மெலிவுக்கு மருந்தும் நீயே; ஆருயிரும் நீ - சிறந்த உயிரும் நீயே; ஏல் என்றாள் - (ஆதலின்) இதனை வாங்கிக் கொள் என்றாள்.

   (வி - ம்.) பெருந்தகை - அன்மொழி; சீவகன். ஏலான் - முற்றெச்சம், துணை - ஒப்பு. தோகையாகிய என் நங்கைக்கு என்க. தொங்கல் - மாலை. தோள் மருந்து - தோள் மெலிவு தீர்க்கும் மருந்து, ஏல் - ஏற்றுக்கொள்.

( 112 )

வேறு

1669 மன்னர் கோயி லுறைவார்
  பொறிசெ றித்த மாண்பினரே
யென்ன வஞ்சி னாயென்
  றவனைநக் காட்கஃ தன்றுகோதா
யின்ன கொள்கை யேற்கேலா
  தென்ன விலங்கெ யிற்றினா
ளன்ன மன்ன நடையினா
  டான்வ ருந்து மெனநோ்ந்தான்.

   (இ - ள்.) மன்னர் கோயில் உறைவார் பொறி செறித்த மாண்பினரே என்ன - (அவன்) அரசர் கோயிலில் தங்குவார் ஐம்பொறியையும் அடக்குவாரே, இது தகாது என்ன; அஞ்சினாய் என்று அவனை நக்காட்கு - (அது கேட்டு) நீ அஞ்சுகின்