பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 95 

தாபித்தனபோல் - தம் உச்சியிலே குளிர்ந்த கதிரைச் சொரியும் நீலமணியை அழுத்தப்பட்டனபோல; மனம்பருகு கருங்கண்ண - நோக்கினார் மனத்தை யுண்ணும் கரிய கண்களையுடையவாய்; ஏம்உற அடிபரந்து - கண்டார் மயக்கமடைய அடிபரந்து; இளம் பிறை வடம்சூடி - இளம்பிறை வடிவமான வடத்தை அணிந்து; ஆம் அணங்கு குடியிருந்து - தம்மேல் இருக்கும் அழகைச் செய்யும் வீற்றுத் தெய்வம் குடிகொள்ளப்பட்டு, அருஞ்சுணங்கு பரந்தன - அரிய தேமல் பரவியிருந்தன.

 

   (வி - ம்.) ”தாமச் செப்பிணை ” எனவே முலையாம். இனி, பூஞ் செப்பாக்கின் சினையிற் கூறும் முதலறி கிளவியும் ஆம் [சினையாகுபெயர்; பூமாலைக்கு ஆயினதால்] ஆம் அணங்கு - மேல் ஆகக்கடவ வருத்தமுமாம்,

 

   [கதையை யுட்கொண்டு].

( 142 )
172 அங்கைபோல் வயிறணிந்த வலஞ்சுழி யமைகொப்பூழ்
கங்கையின் சுழியலைக்குங் கண்கொளா நுடங்கிடையை
யுண்டெனத் தமர்மதிப்பர் நோக்கினார் பிறரெல்லா
முண்டில்லை யெனவைய மல்லதொன் றுணர்வரிதே.

   (இ - ள்.) அங்கைபோல் வயிறு அணிந்த - அகங்கை போலும் வயிற்றை அழகுசெய்த; வலஞ்சுழி அமை கொப்பூழ் கங்கையின்சுழி அலைக்கும் - வலஞ்சுழியாக அமைந்த கொப்பூழ் கங்கையின் சுழியை வருத்தும்; கண்கொளா நுடங்கிடையைத் தமர் உண்டு என மதிப்பர் - கண்ணுக்குத் தோன்றாத அசையும் இடையை உறவினர் பயிற்சியால் உண்டு என்று கருதுவர்; நோக்கினார் பிறர் எல்லாம் - (மற்று) நோக்கிய மற்றையர் யாவரும்; உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிது - பிற உறுப்புக்கள் உண்மையான் உண்டு என்றும், கட்புலனாகாமையில் இல்லை என்றும் ஐயுறுதல் அல்லது இரண்டில் ஒன்று துணிதல் அரிது.

 

   (வி - ம்.) கங்கை - குலந்தூய்மைக்குக் கூறினார்.

 

   இவ்வழகிய செய்யுளின் கருத்தைக் கம்பநாடர் தங்காவியத்தே,

 
  ”பல்லியல் நெறியிற் பார்க்கும் பரம்பொரு ளென்ன யார்க்கும்  
  இல்லையுண் டென்ன நின்ற இடையினுக் கிடுக்கண் செய்தார்”. (கம்ப. கோலங். 12)  

   எனப் பின்னும் அழகுறுத்தி அமைத்துக் கொண்டார்.

( 143 )
173 மன்னாக விணைப்படமுந் தோ்த்தட்டு மதிமயக்கிப்
பொன்னால வட்டமும்போற் கலையிமைக்கும் மகலல்குற்
கொன்னிளம் பருதியுங் குறுமுயலின் குருதியும் போன்
றின்னரத்தப் பட்டசைத் திந்திரற்கும் புகழ்வரிதே.