பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 953 

   (இ - ள்.) வெய்ய பொரு சரம் சலாகை புகன்றனர் துரக்கும் ஆறும் - கொடியனவாகிய பொருகணையையும் இருப்பு நாராசத்தையும் விரும்பி எய்யும் முறையையும்; வருகணை விலக்கும் ஆறும் - தம் மேல் வரும் அம்பை அம்பினால் விலக்கும் முறையையும்; வாள் அமர் நீந்தும் ஆறும் - வாளேந்தும் போர்க்களத்திலே போரைக் கடக்கும் வகையையும் ; கருவியுள் கரக்கும் ஆறும் - அம்பு முதலியன பகைவர் எய்தாற் கருவிகளாலே தம்மை மறைத்துக் காத்துக் கொள்ளும் நிலையையும்; கணைபுறம் காணும் ஆறும் - பகைவர் அம்பைப் புறமாக்கித் தம் அம்பைச் செலுத்தும் திறனையும்; அவர்க்கு விரியக் காட்ட - அவர்கட்கு விரிவாகக் கற்பிக்க; அவரும் வீற்றிருந்து கற்றார் - அவரும் சிறப்புற வருத்தமின்றிக் கற்றனர்.

   (வி - ம்.) எனவே, 'தொடையும் விலக்கும் செலவும் சேமமும் தவிர்த்து வினைசெயலும் என ஐவினையாம்' வடநூலார் பஞ்ச கிருத்தியம் என்பர். இவை தலைமை பற்றி வில்லையே கூறின வேனும் படைக்கலங்கட் கெல்லாம் பொது.

   இச் செய்யுளையும் அடுத்த செய்யுளையும், 'பொருவில் நாழிகை பூணுமாறும், செருவாளாட்டும் சேடகப் பிண்டியும் சாரியை விலக்கும் வேல்திரி வகையும், இடுக்கட்போதில் ஏமப் பூமியுள், வகுத்தவாயில் வகைவகை இவையென, ஒட்டும் பாய்த்துளும் கரந்தொருங் கிருக்கையும் செருக்கொள் யானை மருப்பிடைத் திரிவும்...பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி” என வரும் பெருங்கதையையும் (1-37, 31-43) ஒப்புக் காண்க.

( 120 )
1677 வேலுடைத் தடக்கை யார்கள்
  வேழமேற் சென்ற போழ்திற்
காலிடைக் கரக்கு மாறுங்
  கையிடைத் திரியு மாறும்
வாலிடை மறியு மாறு
  மருப்பிடைக் குளிக்கு மாறு
நூலிடைக் கிடந்த வாறே
  நுனித்தவன் கொடுப்பக் கொண்டார்.

   (இ - ள்.) வேலுடைத் தடக்கையார்கள் - வேலேந்திய பெருங்கையினரான விசயன் முதலானோர்; வேழம் மேற் சென்ற போழ்தில் - யானை தம்மேல் வந்த காலத்தில்; காலிடைக் கரக்கும் ஆறும் - அதன் கால்களினிடையே புகுந்து மறையும் படியையும்; கையிடைத் திரியும் ஆறும் - அது துதிக்கையால் வளைத்த பொழுது அதன் கைக்கு நடுவே உடம்பு பிறழும் திறனையும்; வாலிடை மறியும் ஆறும் -அது தன் வாலாலே வீசினால் அது படாதவாறு அதன் காலிடையே புகும் வகையை