பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 97 

பேராத வட்டம் ஆமாறு; ஒக்க உணராமை பொருந்திய சந்தினவாய் - நன்மை இதற்கு ஒப்ப வேறு ஒன்றில் உணராதவாறு உள்ளே பொருந்திய சந்துகளை உடையனவாய்; நெக்குப்பின் கூடாது நிகர் அமைந்த முழந்தாளும் - நெகிழ்ந்து பின் போகாமல் இரண்டும் சமமாக உள்ள முழந்தாட்களும்; மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தன - மற்ற மக்களுக்கு அமையாத சிறப்பினால் மிக்கன

 

   (வி - ம்.) ['நிகர் அமைந்த' என்பதற்கு' உவமையில்லாத' என்பது வலிந்துகொள்ளும் பொருளாகும்]

( 146 )
176 ஆடுதசை பிறங்காது வற்றாது மயிரகன்று
நீடாது குறுகாது நிகரமைந்த வளவினவாய்ச்
சேடாவ நாழிகையிற் புடைதிரண்டு தேனெய்பெய்
வாடாத காம்பேபோற் கணைக்காலின் வனப்பினவே.

   (இ - ள்.) ஆடுதசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று - ஆடுதசை பெயராமலும்வற்றாமலும்மயிர்பெருகி;நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய் - நீடாமலுங் குறுகாமலும் (இரண்டும்) சமமான அளவினவாய்; சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு - பெருமைமிக்க அம்பறாத்தூணி போலத் திரண்டு; தேன் நெய்பெய் வாடாத காம்பேபோல் - தேனும் நெய்யும் பெய்து வைக்கும் வாடாத மூங்கிலே போல்; கணைக்கால் இன் வனப்பின - கணைக்கால்கள் இனிய வனப்பின.

 

   (வி - ம்.) தேவி நிறத்திற்கு உவமை பதுமராகமாயினும், மயிர்கள் பெருகியதனால் காம்பு உவமையாயிற்று. இனி, கணைக்காலின்வனப்பு இன்ன என்றுமாம் [இன்னஎன வருவித்தல் வேண்டும்].

 

   அகன்று - பெருகி, நிகரமைந்த - சமமாகவுள்ள. சேடு - பெருமை. ஆவநாழிகை - அம்புக் கூடு (அம்பறாத்தூணி). வாடாத காம்பு- பச்சை மூங்கில்.

( 147 )
177 பசும்பொன்செய் கிண்கிணியும் பாடகமும் பாடலைப்ப
நயந்தெரி பொற்சிலம்பு முத்தரிபெய் தகநக
வியைந்தெழிலார் மணியாமை யிளம்பார்ப்பின் கூன் (புறம்போ)
லசைந்துணர்வு மடிந்தொழியு மடியிணை புகழ்வார்க்கே.

   (இ - ள்.) பசும்பொன்செய் கிண்கிணியும் பாடகமும் முத்து அரிபெய்து - புதிய பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணியும் பாடகமும் முத்துக்களால் ஆகிய அரியபெய்யப்பெற்று; பாடு அலைப்ப - தாங்கிக் கிடக்கும் இடத்தை வருத்துவதாலே; எரி பொன் சிலம்பு நயந்து அகம்நக - ஒளிவிடும் பொற்சிலம்பு விரும்