பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 98 

பிச் சிறிதே நகைப்ப; எழில்ஆர் மணிஆமை இளம்பார்ப்பின் கூன்புறம்போல் அடியிணை - அழகு பொருந்திய யாமையின் இளம்பார்ப்பின் வளைந்த முதுகைப் போலும் அடியிணையை; இயைந்து புகழ்வார்க்கு உணர்வு அசைந்து மடிந்து ஒழியும் - புகழ விரும்பிப் புகழ்வார்க்கு உணர்வு துளங்கிக் கெட்டுப்போம்.

 

   (வி - ம்.) ”பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை, ” ”தவழ்பவை தாமும் அவற்றுஓ ரன்ன” (தொல். மரபு. 4.5) என்றார்.

 

   பாடலைப்ப என்பதனைப் பரடலைப்ப என்று கோடலே பொருந்தும். கிண்கிணியும் பாடகமும் அழகுக்கிட்டனவாகவும் அலைத்தல் கண்டு நயந்தெரி சிலம்பு (அவற்றை இகழ்ந்து) ”அகநக” என்றமை உணர்ந்தின்புறுக.

( 148 )
178 அரக்கியல் செங்கழுநீ ரகவிதழ்போ லுகிர்சூடிப்
பரப்பின்றி நுதியுயர்ந்து பழிப்பறத் திரண்டுநீண்
டொருக்குற நெருங்கிப்பொன் னொளியாழி யகங்கௌவித்
திருக்கவின் கொண் மெல்விரல்க டேனார்க்குந் தகையவே.

   (இ - ள்.) திருக்கவின்கொள் மெல்விரல்கள் - திருவின் விரலழகைக் கொண்ட மெல்லிய விரல்கள்; நுதி பரப்பின்றி உயர்ந்து பழிப்பு அறத்திரண்டு நீண்டு ஒழுக்குஉற நெருங்கி - நுனி பரப்பின்றிக் காணலுற்றுத் திரண்டு நீண்டு சேர நெருங்கி; ஒளிபொன் ஆழி அகம்கௌவி அகஇதழ்போல் உகிர்சூடி - ஒளியுடைய பொன் மோதிரம் கௌவப்பட்டு, அகஇதழ் போலும் (செம்பஞ்சூட்டிய) உகிரை யணிந்து; தேன் ஆர்க்கும் தகைய - (மலரென்று) தேன்வண்டுகள் ஆரவாரிக்கும் இயல்பின.

 

   (வி - ம்.) குலிகம் ஊட்டின அகவிதழ் செம்பஞ் சூட்டியதற்கு உவமம்.

( 149 )
179 என்பொடு நரம்பின்றி யிலவம்பூ வடரனுக்கி
யின்புற வரம்புயர்ந் திருநில முறப்புல்லி
யொன்பதின்சா ணடப்பினு மொருகாத மென்றஞ்சு
மென்பஞ்சிச் சீறடியு மேதக்க விழைவினவே.

   (இ - ள்.) என்பொடு நரம்புஇன்றி இலவம்பூ அடர் அனுக்கி - என்பும் நரம்பும் இன்றி இலவின் இதழைக் கெடுத்து; இன்புற வரம்பு உயர்ந்து இருநிலம் உறப்புல்லி - கண்ணுக்கினிய புறஎல்லை உயர்ந்து நிலத்தைப் பொருந்தக் தழுவி; ஒன்பதின் சாண் நடப்பினும் ஒருகாதம் என்று அஞ்சும் - ஏழடி நடந்தாலும் ஒருகாதம் என்று அஞ்சும் ; மென்பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவின - மெல்லிய பஞ்சனைய சிற்றடியும் பெருமைதக்க விருப்பின.