பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 99 

   (வி - ம்.) ஏழடியென்றல் மரபாயிருக்க 'ஒன்பதின்சாண்' என்றது ஒரு காதம் என்னும் [மோனை] எழுத்தை நோக்கி.

 

   தம்மிடம் வந்த பெரியோர்க்கு வழிவிடுதற்குச் செல்லுங் குறைந்த தொலைவு ஏழடியென்பர். இதனால் சப்தபரம ஸ்தானம்பெறுவரென்பது சைனநூற் கொள்கை.

( 150 )
180 இவ்வுருவு நெஞ்சென்னுங் கிழியின்மே லிருந்திலக்கித்
தவ்வுருவு நினைப்பென்னுந் துகிலிகையால் வருத்தித்துக்
கவ்வியத னோக்கினாற் கண்விடுத்துக் காதனீர்
செவ்விதிற் றெளித்தானாக் காமப்பூச் சிதறினான்.

   (இ - ள்.) இவ்வுருவு இருந்து நெஞ்சு என்னும் கிழியின் மேல் இலக்கித்து - (கூறிய) இவ்வடிவை ஒருப்பட்டிருந்து நெஞ்சு என்னும் படத்திலே குறித்து; அவ்வுருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்து - அதனை நினைவு என்னும் எழுது கோலால் உறுப்பு விளங்க எழுதி; கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்து - தான் கைக்கொண்ட தியானத்தாலே அதன் கண்ணைத் திறந்து; காதல்நீர் செவ்விதின் தெளித்து - (மாமன் மகளாகையால்) அன்பு என்னும் நீரைச் சொரிந்து; ஆனாக் காமப்பூச் சிதறினான் - புணர்ச்சி வேட்கையாகிய குறைவில்லாத மலர்களைச் சிதறினான்.

 

   (வி - ம்.) இவன் எழுதிப் பிரதிட்டித்தான். இலக்கு - குறித்துப் பார்த்தால். 'இருந்து இலேகித்து' என்றும் பாடம். இலேகித்து - எழுதி.

 

   இத்தகைய அழகியாகிய விசயையை (162) (நல்லூழ் நடத்தலாலே) சச்சந்தன் நெஞ்சு பொருந்தக் காதலிப்பானாயினன் என்பது கருத்து.

( 151 )
181 மெய்பெறா வெழுத்துயிர்க்கும் மழலைவா யின்முறுவற்
றையலா ணெடுங்தடங்கண் வலைப்பட்டுச் சச்சந்த
னையுறா னணங்கெனவே யகத்தடக்கிச் செல்கின்றான்
மொய்யறாக் களியானை முழங்கித்தே னிமிர்தாரான்.

   (இ - ள்.) மொய்அறாக் களியானை முழங்கித் தேன்இமிர் தாரான்- போரில் நீங்காத மதயானைபோல் முழங்கி, வண்டுகள் ஒலிக்குந் தாரானாகிய சச்சந்தன்; எழுத்து மெய்பெறா உயிர்க்கும் மழலைவாய் இன்முறுவல் தையலாள் - எழுத்து வடிவு பெற்றுத் தோன்றும் இளைய மொழியையும் இனிய முறுவலையும் உடைய அம் மங்கையின்; நெடுந் தடங்கண் வலைப்பட்டு - நீண்ட அகன்ற கண்வலையிலே சிக்கி; ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கிச் செல்கின்றான்- கால்நிலம் தோய்தல் கண்இமைத்தல் மாலை