கனகமாலையார் இலம்பகம் |
993 |
|
|
1743 |
என்னைக்கண் டடிசி லாக்க | |
|
வையர்க்கென் றவல நீங்கப் | |
|
பொன்னைக்கண் டனைய சாய | |
|
லவர்புரிந் தடிசி லேந்தத் | |
|
துன்னிநோ யுற்ற மஞ்ஞைத் | |
|
தோற்றம்போ லிருந்த நங்கை | |
|
பின்னைநாட் குவளை நீர்வீழ் | |
|
பெற்றிய கண்ண ளாகி. | |
|
(இ - ள்.) என்னைக் கண்டு - என்னைக் கண்ட அளவிலே; ஐயர்க்கு அவலம் நீங்க அடிசில் ஆக்க என்று - ஐயர்க்கு வருத்தம் நீங்க உணவு சமைக்க என்ன; பொன்னைக் கண்டன்ன சாயலவர் புரிந்து அடிசில் ஏந்த - திருவனைய சாயலார் உணவினைச் சமைத்து ஏந்த; நோய் உற்ற மஞ்ஞைத் தோற்றம்போல் இருந்த நங்கை துன்னி - நோயடைந்த மயிலின் தோற்றம் போல் இருந்த அந் நங்கை என்னை அணுகி; பின்னை நாள் குவளை நீர் வீழ்பெற்றிய கண்ணாள் ஆகி - செவ்வியழிந்த குவளையிலிருந்து நீர் வீழும் தன்மையுடைய கண்களையுடையவளாய்.
|
(வி - ம்.) பின்னை நாட்குவளை எனவே, செவ்வியழிந்த குவளையா யிற்று. பின்னை ஐ : அசை. பின்னாள் - மற்றை நாள், என்று - என்ன : எச்சத்திரிபு. 'ஆக்குக' என்பது, 'ஆக்க' என விகாரப்பட்டது. இப்பாட்டுங் குளகம்.
|
( 187 ) |
1744 |
அடிகளை யின்றி நீரே | |
|
யுண்ணவும் வல்லீ ரானீர் | |
|
கடியிர்நீ ரைய னீரே | |
|
யெனக்கசிந் துருகிக் காய்பொற் | |
|
கொடிதுக ளார்ந்த வண்ணங் | |
|
குழைந்துமா நிலத்து வீழ்ந்த | |
|
பெடைமயிற் சாய லாடன் | |
|
பேதுகண் டாங்கு மீண்டேன். | |
|
(இ - ள்.) ஐயனீரே!- ஐயரே!; அடிகளை இன்றி நீரே உண்ணவும் வல்லீர் ஆனீர் - நம் தலைவரை விட்டு நீர் தனியே உண்ணவும் உறுதியுடையீர் ஆயினீர்; நீர் கடியிர் என - நீவிர் கொடியீர் என்று ; கசிந்து உருகி - அழுது உருகி; காய் பொன்கொடி துகள் ஆர்ந்த வண்ணம் - காய்ந்த பொன்னாலான கொடி புழுதியிலே பொருந்தினாற் போல; குழைந்து மாநிலத்து வீழ்ந்த - சோர்ந்து பெருநிலத்தே விழுந்த; பெடைமயில்
|