250. அன்றது அக் கடல் அளித்து
     அகல நின்று அளிதுஅரோ;
சென்று தக்க பணி சேர் முனி
     திறத்து எனின்அரோ;
வென்று இதற்கு மொழி மேல்
     இடுதல் வேண்டுதல்அரோ;
இன்று இதற்கும் ஓர் எல்லை
     பொருள் உள்ளுள் உளரோ.

    அளிது - இரங்கத்தக்கது.                          3-5

     சூழலுக்கு ஒவ்வாதன; சொல் தெளிவு இல்லாதன; பிழை வடிவு
கொண்டு குழ(ம்)ப்பும் சொல்லாட்சி கொண்டன. ஐயரவர்கள் நூலகப்
பதிப்பின் குறிப்பு மிகவும் பொருத்தம். அடையாளம் காட்டாமலே
விட்ட வை.மு.கோ. வின் செயல் மிகமிகப் பொருத்தம்.

251-253.

இந்த நான்கு பாடல்களும் முன் வந்த ஐந்து மிகைப் பாடல்களின்
தன்மை உடையனவே. 'சீர், தளை முதலியன பிறழ்ந்தும், பொருள்
விளங்காமல் பதங்கள் சிதைந்தும் காணப்படுகின்றன' என்பது
ஐயரவர்கள் நூலகப் பதிப்பின் விளக்கம். அப்பதிப்பு ஐந்து பாடல்கள்'
என்கிறது; கம்பன் கழகம் நான்கையே அச்சிட்டுள்ளது. வை. மு. கோ.
பதிப்பில் விடப்பட்டவை இவை 4-1, 2, 3, 4