2524. | புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறிஉற, பக்கம் மின்னும் மணி மேரு சிகரம் குழைபட, செக்கர் வான் மழை நிகர்க்க, எதிர் உற்ற செருவத்து உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையி னொடே |
(விராதன் வருகையினால்); புக்க வாள் அரி - புகுந்த ஒளியுடைய சிங்கங்கள்; முழங்கு - முழக்கு; செவியின் பொறிஉற - காதுகளில் பொருந்த; பக்கம் மின்னும்- எல்லாப் பக்கங்களிலும் ஒளி வீசும்; மணிமேருசிகரம் - இரத்தினம் பொருந்தியமேருமலையின் முகடு; குழைபட - குளிர்ந்து கெட, எதிர் உற்ற செருவத்து - எதிர்ப்பட்ட போரில்; உக்க வீரர் உதிரத்தின் - வீழ்ந்த வீரரின் இரத்தத்தால்; செக்கர் வான்மழை நிகர்க்க - செவ்வான மேகம் போல; ஒளிர் செச்சையினொடு- விளங்கும் செஞ்சந்தனப் பூச்சுடனே; ஏ - அசை. சிங்கங்களின் செவியின் பொறி புக்கு உக என்றும் கூறுவர், விராதன் செவி மலைக்குகைபோல் இருந்தன என்பதாம். அவனுடைய கரிய தோளில் பூசிய சிவந்த இரத்தப் பூச்சு செவ்வானமேகம் போன்றது. 8 |