2531.செங் கண் அங்க அரவின் பொரு
     இல் செம் மணி விராய்
வெங் கண் அங்க வலயங்களும்,
     இலங்க விரவிச்
சங்கு அணங்கிய சலஞ்சலம்
     அலம்பு தவளக்
கங்கணங்களும், இலங்கிய
     கரம் பிறழவே

    செங்கண் அங்க அரவின்- சிவந்த கண்களையும் (நீண்ட) உடலையும்
உடைய பாம்புகளுடைய; பொரு இல் - ஒப்பில்லாத;செம்மணி விராய் -
சிவந்த மாணிக்கங்கள் கலந்து அமைக்கப்பட்டு; வெங்கண் அங்க
வலயங்களும் -
கொடிய தன்மை உடைய உறுப்புகளில் அணியும் தோள்
வளைகளும்; இலங்க - விளங்கி அசைய; விரவி - பொருந்தி; சங்கு
அணங்கிய சலஞ்சலம் -
சங்குகள் வருந்திப் பெற்ற சலஞ்சலம் என்னும்
உயர்ந்த சங்குகளால்; அலம்பு - ஒலிக்கின்ற, தவளக் கங்கணங்களும் -
வெண்ணிறக் கைவளைகளும்; இலங்கிய கரம்பிறழவே - விளங்கும்
கைகளில் விளங்கவும்; ஏ - ஈற்றசை.

     பாம்பின் மணிகளால் இயன்ற வலயங்களோடு முத்துக்கங்கணமும்
விராதன் அணிந்துள்ளான்.சஞ்சலம் - வலம்புரி ஆயிரம் சூழ்ந்த ஓர்
உயர்ந்த சங்கு. (49).                                           15