2543. ‘இற்றது இன்றொடு இவ் அரக்கர்
     குலம்’ என்று, பகலே,
வெற்ற விண்ணினிடைநின்று நெடு
     மீன் விழுவபோல்,
சுற்று அமைந்த சுடர் எஃகம்அது
     இரண்டு துணியா
அற்ற கண்டம்அவை ஆசையினது
     அந்தம் உறவே

    இவ்வரக்கர் குலம் இன்றொடு இற்றது - இந்த இராக்கதக் கூட்டம்
இந்த நாளோடு முடிந்தது; என்று - எனக் குறிபார்த்து; பகலேவெற்ற
விண்ணினிடை நின்று நெடு மீன் விழுவ போல் -
பகற்காலத்திலே
வேகமற்ற வெறும்வானத்திலிருந்து பெரிய விண்மீன்கள் வீழ்வன போல;
சுற்று அமைந்த சுடர் எஃகம் அது - சுற்றிலும் பொருந்திய ஒளியுடைய
சூலம்; இரண்டு துணியா - இரண்டு துண்டாக்கப்பட்டு; அற்ற கண்டம்
அவை -
அழிந்த அத்துண்டங்கள்; ஆசையினது அந்தம் உற -
திக்குகளின்எல்லையை அடைய; ஏ - ஈற்றசை.

     வெற்ற விண் - வேறு ஒன்றும் இல்லாத சூனியமான ஆகாயம். பகலில்
விண்மீன்கள் விழுவதுகேட்டின் அறிகுறி. சூலத்தின் துண்டுகள் வானில்
விண்மீன்களாக விழுந்த நிலை அரக்கர் அழிவுக்குஅறிகுறியாம். ஆசை -
திக்கு. எ - டு ஆசை பத்திற்கும் (3422) அது, அவை என்பன பகுதிப்
பொருள்விகுதி.                                               27