2547. | ஏறு சேவகன் இரண்டினொடு இரண்டு கணையால் வேறு வேறு துணிசெய்து, அது விழுத்தி, விசையால் மாறு மாறு, நிமிர் தோளிடையும் மார்பினிடையும் ஆறும் ஆறும் அயில் வெங் கணை அழுத்த, அவனும் |
ஏறு சேவகன் - நாளும் வளரும் வீரப்பண்புடைய இராமன்; இரண்டினொடு இரண்டு கணையால் - நான்குஅம்புகளால், வேறு வேறு துணி செய்து அது விழுத்தி - பல துண்டுகளாக வெட்டி அந்த மராமரத்தைத் தள்ளி விட்டு; நிமிர் தோளிடையும் மார்பினிடையும் மாறு மாறு - உயர்ந்த தோள்களிலும் மார்பிலும் மாற்றி மாற்றி, விசையால் ஆறும் ஆறும் அயில் வெங்கணைஅழுத்த - வேகத்தால் பன்னிரண்டு கொடிய அம்புகளைப் பதியும்படி எய்ய; அவனும் - அவ்வரக்கனும் விராதன் எறிந்த மராமரத்தை இராமன் நான்கு அம்புகளால் துண்டித்து வீழ்த்தினான்.அவ்வரக்கன் மார்பிலும் தோளிலும் அவ்வாறே அம்புகளைச் செலுத்தினான். ஏறு சேவகன் என்பதற்குநடை, வீரம், தோற்றப் பொலிவு முதலியவற்றால் சிங்கம் போன்ற வீரன் எனலுமாம். இடை -இடம். 31 |