2551.உண்டு எழுந்த உணர்வு அவ்வயின்
     உணர்ந்து முடுகி,
தண்டு எழுந்தனைய தோள்கொடு
     சுமந்து, தழுவி,
பண்டு எழும் தனது வன் கதி
     பதிற்றின் முடுகிக்
கொண்டு எழுந்தனன் - விழுந்து
     இழி கொழுங் குருதியான்.

    விழுந்து இழி கொழுங் குருதியான் - கீழே விழுந்து பெருகி வழியும்
மிகுந்த இரத்தத்தை உடையவனாகி; அவ்வயின் உண்டு எழுந்தஉணர்வு
உணர்ந்து -
அவ்விடத்தில் மீண்டும் எழும் உணர்ச்சி அடைந்தவனாகி;
முடுகித்தண்டு எழுந்தனைய தோள்கொடு தழுவிச் சுமந்து - விரைந்து
தண்டாயுதம் போன்ற தன்தோள்களைக் கொண்டு இராமலக்குவரை
அணைத்துத் தூக்கி; பண்டு எழும் தனதுவன்கதி(ப்)பதிற்றின் முடுகி -
பழமையில் தன்னிடம் உண்டாகும் வலிய வேகத்தில்பதின்மடங்கு விரைவு
கொண்டு; கொண்டு எழுந்தனன் - மேற்கொண்டு எழும்பியவனாய்

     இரத்த ஆறு பெருகிட உணர்வு சோர்வுற்ற விராதன் மீண்டும்
உணர்வுற்று இராமலக்குவரைத் தன்தோளில் சுமந்து விரைந்து சென்றனன்.
தண்டு - தண்டம் என்பதன்திரிபு.                                35