2553.சுவண வண்ணனொடு கண்ணன் உறை
     தோளன் விசை தோய்
அவண விண்ணிடை நிமிர்ந்து
     படர்கின்றவன், அறம்
சிவண, தன்ன சிறைமுன் அவரொடு,
     ஏகு செலவத்து
உவணன் என்னும் நெடு மன்னவனும்
     ஒத்தனன் அரோ.

    சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் - பொன்
நிறமுள்ள இலக்குவனோடு இராமன் விளங்கிய தோளை உடைய விராதன்;
விசைதோய் - வேகமிக்கு; அவண விண்ணிடை நிமிர்ந்து
படர்கின்றவன் -
அப் புறத்ததான ஆகாயத்தில்எழுந்து செல்கின்றவனாம்
அவ் வரக்கன்; அறம் சிவணது அன்ன - தருமம் வடிவெடுத்ததைப்
போன்ற; சிறை - இறக்கைகளோடு; முன் அவரொடு ஏகு செலவத்து -
முன்னம் பலராமன்கண்ணனொடு செல்கின்றதை உடைய; உவ ணன்
என்னும் நெடுமன்னவனும் ஒத்தனன் -
கருடன்என்னும் சிறப் புடை
மன்னவனைப் போன்று விளங்கினான்.

     இங்கு விராதனைக் கருடனாகவும் இராமலக்குவரைப் பலராமன்
கண்ணனாகவும் உவமிக்கப்பெற்றுளது. கருடன் தருமத்தின் வடிவு என்பர்.
இராமனைக் கண்ணன் என்றது கருணை உடையவன் என்பதுகுறித்துமாம்.
இராமலக்குவர் முன்னவதாரம். கண்ணன், பலராமன், பின்னவதாரம்;
இவ்வாறுகூறுதல் கவி மரபு.
சுவண வண்ணன் - பொன் வண்ணனாம்
சிவனைக் குறிப்பர் சிலர். அப்போதுசங்கர நாராயணன் உவமை ஆவர்.  37