விராதன் தன் வரலாறு கூறல். 2577. | இற்று எலாம் இயம்பினான் நிற்றலோடும், 'நீ இவ்வாறு உற்றவாறு உணர்த்து' எனா, வெற்றியான் விளம்பினான் |
இற்று எலாம் இயம்பினான் நிற்றலோடும் - இவ்விதமாய் எல்லாவற்றையும் சொன்ன விராதன் அவ்வாறு சொல்லி நின்ற அளவில்; 'நீ இவ்வாறு உற்றவாறு உணர்த்து' எனா வெற்றியான் விளம்பினான் - நீ இவ்விதம் அரக்கனாகப்பிறந்த வரலாற்றை அறிவிப்பாய்' என்று இராமன் கூறப் பிறவியை வென்றவனாம் விராதன் கூறத்தொடங்கினான். வெற்றியான் - விராதனை வென்ற இராமனும் ஆவான். இற்று எலாம்- ஒருமை, பன்மைமயக்கம். 61 |