2579. | இம்பர் உற்று இது எய்தினேன் வெம்பு விற்கை வீர! பேர் தும்புரு; தனதன் சூழ் அம்பரத்து உளேன் அரோ! |
வெம்பு வில் கை வீர - கொடுமையுடைய வில்லைக் கையில் ஏந்திய வீரனே!; இம்பர் உற்று இது எய்தினேன் - இவ்வுலகை அடைந்து இவ் வரக்கப் பிறவியை அடைந்தேன்; பேர் தும்புரு - என் பெயர்தும்புரு என்பதாம்; தனதன் சூழ் அம்பரத்து உளேன் - குபேரன் ஆட்சிக்கு உட்பட்டவானுலகில் உள்ளவன் நான். தனதன் - செல்வத்திற்குரியவன், குபேரன். இராமனின் வில்லாற்றலை நேரே அனுபவித்தவிராதன் 'வெம்பு வில்' என்றான். அம்பரம் - ஆகுபெயர். 63 |